கோடை உழவை தொடங்க விதை நெல் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்: வத்திராயிருப்பு விவசாயிகள் கோரிக்கை

 

வத்திராயிருப்பு, ஜன. 28: வத்திராயிருப்பு பகுதியில் கோடை உழவை தொடங்க வேண்டி உள்ளதால் வேளாண் அலுவலகத்தில் விதை நெல் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான கூமாப்பட்டி, கான்சாபுரம், தம்பிபட்டி, மகாராஜபுரம், கோட்டையூர், அத்திகோயில் உள்ளிட்ட பகுதிகளில் பிரதானமாக நெல் விவசாயம் நடைபெற்று வருகிறது. தற்போது அறுவடை பணி முடிந்து கோடை விவசாய பணியை விவசாயிகள் துவங்கி உள்ளனர்.

இந்த நிலையில் விவசாய பணிக்கு தற்போது வத்திராயிருப்பு வேளாண் அலுவலகத்தில் விதை நெல் வழங்குவது தாமதமாகி வருவதாக விவசாயிகள் கூறுகின்றனர். இதுகுறித்து விவசாயி கோவிந்தன் கூறுகையில், வத்திராயிருப்பு வேளாண் அலுவலகத்தில் விதை நெல் கேட்டுள்ளோம். விதை நெல் தட்டுப்பாடு உள்ளதால் விநியோகிப்பதில் தாமதம் ஏற்பட்டு வருவதாக தெரிகிறது. வத்திராயிருப்பு சுற்றுவட்டார பகுதிகளில் நெல் விவசாயமே பிரதானமாக நடைபெற்று வருகிறது. தற்போது கோடை விவசாய பணிகளை துவங்க வேண்டி உள்ளது. இதனை கருத்தில் கொண்டு வேளாண் அதிகாரிகள் விதை நெல் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

Related posts

ஆசிரியர்கள் கலந்தாய்வுக்கு எதிராக நடத்தும் போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம் பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு அறிவிப்பு

கஞ்சா விற்றவர் கைது

முப்பெரும் சட்டங்களை அமல்படுத்த எதிர்ப்பு திருச்சியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்