கோடியக்கரை வனவிலங்கு சரணாலயத்தில் வனவிலங்குகளை பார்க்க சுற்றுலா பயணிகள் ஆர்வம்

வேதாரண்யம் : கோடிக்கரை வனவிலங்கு சரணாலயத்தில் செழித்து வளர்ந்துள்ள புள்ளிமான் மற்றும் வெளிமான்களை பார்க்க சுற்றுலா பயணிகள் வருகை அதிகாரித்துள்ளது.நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் தாலுகா கோடியக்கரையில் பசுமைமாறா வனவிலங்கு சரணாலயம் 24 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கு இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட வெளிமான் மற்றும் புள்ளிமான் 500க்கும் மேற்பட்ட குரங்குகள் நூற்றுக்கும் மேற்பட்ட மட்ட குதிரைகள் மற்றும் நரி, முயல், மயில் என வனவிலங்குகள் வசித்து வருகின்றன. பசுமைமாறா காட்டில் இயற்கையோடு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்த வனவிலங்கு சரணாலயத்தில் மான்களுக்கு தண்ணீர் வருவதற்காக 17 செயற்கை தொட்டிகளும், 40 இயற்கையான குளங்களும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு கோடைமழையால் மான்களுக்கு போதிய புல்லும் தண்ணீரும் தட்டுபாடி இன்றி கிடைத்ததால் காட்டுடை விட்டு மான்கள் வெளியேறவில்லை. மேலும் உணவும் தண்ணீரும் போதுமான அளவு கிடைத்ததின் காரணமாக மான்கள் நன்றாக செழித்து வளர்ந்து காட்டில் சுதந்திரமாக சுற்றி திரிகின்றன. மேலும் கடந்த ஆண்டு கொரோனா காட்டுபாடு காரணமாக சரணாலயம் மூடப்பட்டு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் வனவிலங்குகள் எந்தவித இடையூறும் இன்றி சுதந்திரமாக சுற்றி திரிந்தும் இனப்பெருக்கத்தி ஈடுபட்டன.இதானல் தற்போது மான்கள், நரிகள், குதிரை, குரங்குகள் முயல்களை, பன்றி கூட்டம் கூட்டமாக சராணலயத்தில் காணப்படுகிறது. இதானல் சரணாலயத்தில் உள்ள வனவிலங்கு பார்ப்பதற்கு நாளைக்கு நாள் கூட்டம் அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக வனத்துறையின் சார்பில் வார விடுமுறை நாட்களில் மேம்பாட்டு குழுவின் சார்பில் உணவகம் அமைத்து உணவுகள் வழங்கப்படுகிறது. சுற்றுலா பணிகள் வனவிலங்கு சுற்றி பார்ப்பதற்கு சைக்கிள் மினிவேன் வழிகாட்டி பைனாகுலார் போன்ற அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. மேலும் வனவிலங்கு கண்களுக்கு காலை 6 மணி முதல் 10 மணி வரை மாலை மூன்று மணியிலிருந்து ஆறு மணி வரைமிக உகந்த நேரம் என கோடிக்கரை வனச்சரகர் அயூப்கான் தெரிவித்தார்….

Related posts

மயிலாப்பூர் நிதி நிறுவனத்தில் ரூ.525 கோடி மோசடி தேவநாதன் மீது 4,100 புகார்கள் குவிந்தன: 4 சொகுசு கார்கள், ரூ.1 கோடி மதிப்பிலான பத்திர ஆவணங்கள் பறிமுதல்

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள் நீக்கப்பட்டவர்கள்தான்: எடப்பாடி பழனிசாமி ஆவேசம்

கிண்டி ரேஸ் கிளப் மைதானத்தில் 118 ஏக்கரில் பசுமைவெளி சுற்றுச்சூழல் பூங்கா: தமிழக அரசாணை வௌியீடு