கோடியக்கரையில் மீனவர்கள் வலையில் சிக்கிய அதிசய நண்டு

வேதாரண்யம்: கோடியக்கரையில் தங்கி மீன்பிடித்து வரும் ராமநாதபுரம் மீனவர்கள் வலையில் ஆரஞ்சு கலரில் அதிசய நண்டு சிக்கியது. நாகை மாவட்டம், வேதாரண்யம் தாலுகா கோடியக்கரையில் அக்டோபர் முதல் மார்ச் வரை மீன்பிடி சீசன் காலமாகும். இந்த சீசன் காலத்தில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மீனவர்கள் தங்கி மீன்பிடித்து வருகின்றனர். சீசன் முடியும் காலத்தில் ராமநாதபுரம் மீனவர்கள் வல்லத்தில் சென்று மீன் பிடித்து வருகின்றனர். இன்னும் ஓரிரு நாட்கள் உள்ள நிலையில் ராமநாதபுரம் மீனவர்களின் வல்லத்தில் அதிசய நண்டு சிக்கியது.பொதுவாக கோடியக்கரை கடற்கரையில் கல் நண்டு, பச்சை நண்டு, நீலக்கால் நண்டு, மூன்று புள்ளி சிலுவை நண்டு உள்ளிட்ட பல்வேறு வகை நண்டுகள் கிடைக்கின்றன. ராமநாதபுரம் மீனவர்கள் வல்லத்தில் ஆரஞ்சு கலரில் அதிசய நண்டு சிக்கியது. இந்த நண்டு 300 கிராம் முதல் 500 கிராம் வரை எடை உள்ளது. பெயர் என்ன என்று தெரியவில்லை என்று கூறினர். கோடியக்கரை கடற்கரையில் ஆரஞ்சு நிறத்தில் இந்த சிக்கிய நண்டை ஏராளமான மீனவர்கள், பொதுமக்கள் பார்த்து சென்றனர்….

Related posts

மக்களுடன் முதல்வர், காலை உணவுத் திட்டம் வரும் 11 மற்றும் 15ம் தேதிகளில் விரிவாக்கம்: எம்.பி, எம்எல்ஏக்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; விழுப்புரம் மாவட்டத்தில் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்!

திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த தடையில்லை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு