கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு: அக். 28-க்கு ஒத்திவைத்தது உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றம்

நீலகிரி: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணையை அக்டோபர் 28ம் தேதிக்கு உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றம் ஒத்திவைத்தது. நீலகிரி மாவட்டம், கோடநாடு எஸ்டேட் கொள்ளை மற்றும் காவலாளி கொலை வழக்கு விசாரணை உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. குற்றம் சாட்டப்பட்ட சயான், வாளையார் மனோஜ், ஜித்தின் ஜாய், ஜம்சீர் அலி ஆகியோர் கடந்த மாதம் 23ம் தேதி விசாரணைக்கு ஆஜராகினர்.அப்பொழுது விசாரணைக்கு பின், அரசு தரப்பு வக்கீல் ஷாஜகான் கூறுகையில், வழக்கில் இதுவரை, 303 பேரிடம் மறு விசாரணை நடத்தப்பட்டுள்ளது. சயான் குடும்பத்தினர் மற்றும் டிரைவர் கனகராஜ் வாகன விபத்து குறித்து, விசாரணை நடந்து வருவதால் கால அவகாசம் கேட்கப்பட்டது. வாளையார் மனோஜ் சென்னை ஐகோர்ட்டில், தனது வழக்கு விரைந்து முடிக்க வேண்டும் என, மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. இதை ஏற்ற நீதிபதி முருகன், வழக்கை செப்., 23க்கு ஒத்திவைத்தார் என்று தெரிவித்தார்.  இந்நிலையில் இன்றைய தினம் வழக்கானது மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது முக்கிய குற்றவாளியாக கூறப்படும் சயான், வாளையார் மனோஜ், , ஜித்தின் ஜாய், ஜம்சீர் அலி ஆகிய நான்கு பேர் மட்டும் ஆஜராகினர். வழக்கு தொடர்பாக கூடுதல் காட்சிகள் இடையே விசாரணை நடத்த அரசு தரப்பு சார்பில் நீதிபதியிடம் கால அவகாசம் கேட்கப்பட்டதால் வழக்கினை அக்டோபர் 28ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவிட்டது….

Related posts

போலீசார், தொழிலதிபர் என 20 பேரை ஏமாற்றி திருமணம்: கல்யாண ராணி சிக்கினார்

ரூ.822 கோடி குத்தகை பாக்கி ஊட்டி குதிரை பந்தய மைதானத்திற்கு சீல்

திருச்சியில் வாலிபர் வெட்டி கொலை தப்பிய ரவுடியை சுட்டு பிடித்த போலீஸ்