கொள்ளையடிக்க திட்டமிட்ட 5 பேர் ஆயுதங்களுடன் கைது

தேன்கனிக்கோட்டை, மே 1: கிருஷ்ணகிரி மாவட்டம் தளி போலீசார் பீலாளம் சாலை பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை பக்கமாக நேற்று முன்தினம் இரவு ரோந்து சென்ற போது, அங்கு சந்தேகத்திற்கு இடமாக 5 பேர் இருந்தனர். அவர்களை பிடித்து போலீசார் விசாரித்த போது, அவர்கள் கையில் பயங்கர ஆயுதங்கள் வைத்திருந்ததும், அப்பகுதிகளில் வீடு புகுந்து கொள்ளையடிக்க திட்டமிட்டதும் தெரிய வந்தது. இதையடுத்து கொள்ளையில் ஈடுபட முயன்ற குனிக்கல் மஞ்சுநாத் என்கிற பெல்லி (35), குனிக்கல் கிரிஷ் (40), ராஜேஷ் (28), தளி மராட்டி தெரு பாலாஜி (22), பெங்களுரு மடிவாளா தாவரக்கரை ரவி (25) ஆகிய 5பேரை போலீசார் கைது செய்தனர். இதில் மஞ்சுநாத் மீது தளி போலீசில் கஞ்சா வழக்கு, அடிதடி வழக்கு, கொலை முயற்சி உள்பட பல வழக்குகள் உள்ளன. அதேபோல கிரீஷ் மீது அடிதடி வழக்குகள் உள்ளன.

Related posts

கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்தவர் மீது பாய்ந்தது ‘குண்டாஸ்’ வழக்கு

ரங்கம் பூ மார்க்கெட்டுக்கு வந்த மினிலாரி கவிழ்ந்து ஆட்டோ, டூவீலர் சேதம்

திருச்சியில் இருந்து கரூர் வரை செல்லும் ராணி மங்கம்மாள் சாலை 4 வழியாக மாற்றம்: விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தில் வலியுறுத்தல்