கொள்ளிடம் ஆற்றில் மீன்பிடிக்க சென்ற மூவர் வெள்ளத்தில் அடித்து சென்றதால் பெரும் பரபரப்பு

தஞ்சாவூர்: திருவிடைமருதூர் கொள்ளிடம் ஆற்றில் மீன்பிடிக்கச் சென்று மாயமான 3 பேரை தீயணைப்பு துறையினர் தேடி வருகின்றனர். தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள அணைக்கரை கொள்ளிடம் ஆற்றில் நேற்று நள்ளிரவு கல்லணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டது. தண்ணீர் திறந்துவிடப்பட்டதை அறியாத, மதகுசாலை கிராம பகுதியை சேர்ந்த ஆகாஷ்(24), மஜ்னு (எ) மனோஜ்(22), அப்பு (எ) ராஜேஷ்(22), கொளஞ்சிநாதன்(34) ஆகிய 4 பேரும், கொள்ளிடம் ஆற்றின் நடுத்திட்டு பகுதியான தண்ணீர் தேங்கி நிற்கும் பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்பொழுது, எதிர்பாரா விதமாக நீரானது 4 புறமும் சூழத் தொடங்கியுள்ளது. இதனை கண்ட அவர்கள், செல்போன் மூலம் உறவினர்களுக்கும், அப்பகுதி மக்களுக்கும் தகவல் அளித்தனர். தகவல் அறிந்து மக்கள் அப்பகுதிக்குச் செல்லும் முன்பே, நீரானது 4 பேரையும் சூழ்ந்து கொண்டது. இதில், கொளஞ்சிநாதன் என்பவர் அருகில் இருந்த நாணல் புல்களை பிடித்துக் கொண்டு நீரில் தத்தளித்துக் கொண்டிருந்தார். இச்சம்பவம் குறித்தறிந்த திருவிடைமருதூர் வட்டாட்சியர் சந்தனவேல் மற்றும் தீயணைப்பு நிலைய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து, நீரில் தத்தளித்த கொளஞ்சிநாதனை மீட்டனர். நீரானது சுமார் 1 லட்சம் கனஅடிக்கு மேல் செல்வதால், நள்ளிரவில் நீரில் தேடும் பணி பெரும் சிரமத்தை ஏற்படுத்தியது. எனினும், இன்று காலை, நீரின் அளவு குறைந்த பிறகே, வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 3 பேரை தேடும் பணி மேலும் தொடரும் என தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர். வெள்ளத்தில் இருந்து மீட்கப்பட்ட கொளஞ்சிநாதன், உடனடியாக பந்தநல்லூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதால், தற்போது நலமுடன் இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. …

Related posts

நெய்வேலி என்எல்சி 2-வது சுரங்கத்தில் கன்வேயர் பெல்ட்டில் சிக்கி தொழிலாளி உயிரிழப்பு..!!

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான குட்கா முறைகேடு வழக்கு விசாரணை சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றம்

நெல்லை மற்றும் கோவை மாநகராட்சி மேயர்களின் ராஜினாமா ஏற்பு