கொள்ளிடம் அருகே கோதண்டபுரம் மகாகாளியம்மன் கோயில் ஆடி திருவிழா

கொள்ளிடம்,ஜூலை 30: மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே கோதண்டபுரம் மகாகாளியம்மன் ஆடி திருவிழாவை முன்னிட்டு, அங்குள்ள சாவடி குளத்தில் புனித நீர் எடுத்து வரும் நிகழ்ச்சியும், முக்கிய தெருக்களில் காளியாட்டத்துடன் அம்மன் வீதியுலாக் காட்சியும் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மகா காளியம்மனுக்கு அபிஷேக ஆராதனையும், கஞ்சி வார்த்தல் மற்றும் அன்னதானமும் நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மன் வழிபாடு செய்தனர். விழா ஏற்பாடுகளை கிராம மக்கள் சார்பில் ஆசிரியர் சங்கர், கோயில் அர்ச்சகர் பழனியப்பன் உள்ளிட்ட விழா குழுவினர் செய்திருந்தனர்.

Related posts

பட்டாசு திரிகள் பறிமுதல்

2 மாதமாக மூடி கிடக்கும் நிறுவனம் சீட்டு பணம் வசூலித்து மோசடி: ஏமாந்தவர்கள் புகார் மனு

பள்ளியில் அடிப்படை வசதி வேண்டும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மனு