கொள்ளிடத்தில் பருவமழையை எதிர்கொள்ள 3000 மணல் மூட்டை, 2 டன் சவுக்குகள் தயார்

கொள்ளிடம் : மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் பொதுப்பணித்துறை அலுவலக வளாகத்தில் பருவ மழையை எதிர் கொள்ளும் வகையில் 3000 மணல் மூட்டைகள் மற்றும் 2 டன் சவுக்கு கட்டைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும் 3 டன் சவுக்கு கட்டைகள் மற்றும் 3000 மணல் மூட்டைகள் எடுத்து வரும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநலை உருவானதையடுத்து டெல்டா மாவட்டங்களின் கரையோர பகுதிகளில் கனமழை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கொள்ளிடம் ஆற்றின் வலதுகரை அளக்குடி கிராமத்தில் வலுவிழந்து காணப்படுகிறது. இரண்டு வருடங்களுக்கு முன்பு கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகமாக இருந்தபோது அங்கு தடுப்புச்சுவர் உடைந்து கரை உடைப்பு ஏற்பட்டது. அந்த கரை தற்காலிகமாக அடைக்கப்பட்டது.தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆற்றில் அதிக நீர் வந்தால் இரண்டு வருடங்களுக்கு முன்பு உடைப்பு ஏற்பட்ட அதே இடத்தில் மீண்டும் உடைப்பு ஏற்படும் சூழ்நிலை உள்ளதால், பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அளக்குடி கிராம கரையை உடனடியாக பலப்படுத்த வேண்டும். மேலும் கரை பலவீனமாக உள்ள இடங்களை ஆய்வு செய்து அதனை பலப்படுத்தவும் முடிவு செய்து தீவிர பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இதுகுறித்து கொள்ளிடம் பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் விவேகானந்தன் மற்றும் பாசன ஆய்வாளர் சீனிவாசன் ஆகியோர் கூறுகையில், தண்ணீர் வரத்து பிரதான பாசன வாய்க்கால்கள் மற்றும் கொள்ளிடம் ஆற்றில் வந்தாலும் உடைப்பு ஏற்படாமலிருக்க தீவிர பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.ஆறு மற்றும் பாசன வாய்க்கால்களில் கரைகள் பலமிழந்து இருக்குமிடம் கண்டுபிடிக்கப்பட்டு அந்த இடங்கள் தற்போது பலப்படுத்தும் பணி உடனடியாக நடைபெறவிருக்கிறது என்றனர்….

Related posts

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தொடர்புடைய 12 இடங்களில் நடந்த சிபிசிஐடி சோதனை நிறைவு

எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடர்புடைய 12 இடங்களில் நடந்த சிபிசிஐடி சோதனை நிறைவு!

துரோகத்தின் மொத்த உருவமே அண்ணாமலைதான்: எடப்பாடி பழனிசாமி காட்டம்!