கொளுத்தும் கோடை வெயிலிலும் மணிமுத்தாறு அருவியில் ஆர்ப்பரிக்கும் தண்ணீர்-சுற்றுலா பயணிகள் படையெடுப்பு

அம்பை :  கோடை போல் கொளுத்தும் வெயிலிலும் தண்ணீர் ஆர்ப்பரிக்கும் மணிமுத்தாறு அருவிக்கு சுற்றுலா பயணிகள் படையெடுத்து குளித்து மகிழ்கின்றனர்.தமிழகம் முழுவதும் கொரோனா பரவல்  குறைந்த நிலையில் சுற்றுலா தலங்களில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம்  அதிகரிக்க தொடங்கியுள்ளது. கடந்த இரு வாரங்களாக கோடை வெயிலின் தாக்கமும்  அதிகரித்துள்ளதால் கோடை வாசஸ்தலங்கள் மற்றும் அருவிக்கரை பகுதிகளுக்கு  சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. நெல்லை மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் மாஞ்சோலை செல்லும் வழியில் இயற்கை அழகுடன் மணிமுத்தாறு அருவி அமைந்துள்ளது. நெல்லை மாவட்டத்தைப் பொருத்தவரையில் மணிமுத்தாறு, பாபநாசம் அகஸ்தியர் அருவிகளில் ஆண்டு முழுவதும் தண்ணீர் கொட்டுவது தனிச்சிறப்பு. இதனால் பெரிதும் ஈர்க்கும் இந்த அருவிகளுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை நாளுக்கு நாள்  அதிகரிக்கிறது. கடந்த காலங்களில் கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. தற்போது கொரோனா தொற்று பரவல் குறைந்ததை அடுத்து 2 ஆண்டுகளுக்கு பிறகு அருவிகளில்  சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது. இதன் காரணமாக அருவிகளுக்கு சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வருகின்றனர். குறிப்பாக கோடை போல் கொளுத்தும் வெயிலிலும் தண்ணீர் ஆர்ப்பரிக்கும் மணிமுத்தாறு அருவிக்கு சுற்றுலா பயணிகள் படையெடுத்து வந்து குளித்து மகிழ்கின்றனர். ஏப்ரல், மே மாதங்களில் இந்த அருவியில் 2 லட்சம் சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ்வர் என வனத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.படகு சவாரிநெல்லையில் இருந்து 42 கி.மீ. தொலைவில் மணிமுத்தாறு அணை உள்ளது. இந்த அணையில் இருந்து வனப்பகுதிக்குள் 4 கி.மீ. தொலைவில் மணிமுத்தாறு அருவி இயற்கை எழிலுடன் காணப்படுகிறது. தென் மாவட்டங்களில் மிகச் சிறந்த சுற்றுலாத்தலமாக  இந்த அருவி திகழ்கிறது. இதனிடையே மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் கணிசமாக உள்ளதால் படகு சவாரிப் பயணம் செய்ய சுற்றுலாப் பயணிகள் பெரிதும் விரும்புகின்றனர். இதே போல் இந்த அணையில் உள்ள பூங்கா பராமரிப்பின்றி உள்ளதால் அடிப்படை வசதிகளை விரைவில் மேம்படுத்தி தரவேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்….

Related posts

ஆந்திர மாநில துணை முதல்வரும், நடிகருமான பவன் கல்யாணுக்கு அர்ச்சகர்கள் சங்கம் கண்டனம்!

பவன் கல்யாணுக்கு அர்ச்சகர்கள் சங்கம் கண்டனம்!

அனைவரும் ஒன்று என்பதுதான் சனாதன தர்மம்: ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு