கொளத்தூரில் நலத்திட்ட உதவிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: தமிழக முதல்வரும், கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினருமான மு.க.ஸ்டாலின் நேற்று மாலை கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் பல்வேறு ஆய்வு  பணிகளை மேற்கொண்டு, நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதன்படி, 64வது வார்டுக்கு உட்பட்ட செல்வி நகரில் பம்பிங் ஸ்டேஷன் பணிக்கு அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து, ஜிகேஎம் காலனியில்   மின்தூக்கி வசதியுடன் புதியஆரம்ப சுகாதார நிலையத்தை திறந்து வைத்தார். பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் சென்டரை துவக்கி வைத்தார். ஜவஹர் நகரில் உள்ள சட்டமன்ற அலுவலத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை, மருத்துவ உதவித்தொகை, ஏழை எளிய மக்களுக்கு மீன்பாடி வண்டி, தள்ளுவண்டி, இஸ்திரி பெட்டி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் இயங்கிவரும் கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்கினார். எஸ்ஆர்பி கோயில் தெருவில் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணியை ஆய்வு செய்தார். பல்லவன் சாலையில் புதிதாக கட்டப்பட்ட அரம்ப சுகாதார நிலையத்தை திறந்து வைத்தார்.  தீட்டித்  தோட்டம் 1வது தெருவில் கட்டப்பட்ட பூப்பந்து கூடத்தை திறந்து வைத்தார். இறுதியாக லூர்து பள்ளியில் அனிதா அச்சீவர்ஸ் அகாடமியில் பயிற்சி முடித்த 152 மாணவிகளுக்கும், டேலி பயிற்சி முடித்த 71 மாணவர்களுக்கும் மடிக்கணினி மற்றும் சான்றிதழ் வழங்கினார். …

Related posts

மின்னணு உதிரிபாகங்கள் தயாரிப்பு தமிழ்நாட்டுக்கு பெரிய போட்டி: தகவல் தொழில்நுட்ப செயலாளர் பேச்சு

சென்னை விமான நிலையத்தில் போதிய பயணிகளின்றி 2 விமானங்கள் ரத்து

தேசிய சப்-ஜூனியர் பூப்பந்தாட்ட போட்டி தங்க பதக்கங்களை குவித்து தமிழ்நாடு அணி சாம்பியன்: சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று வரவேற்பு