கொல்லிமலையில் சீக்குப்பாறை காட்சி முனையம் செல்ல தடை

சேந்தமங்கலம், ஜன.10: கொல்லிமலை சீக்குப்பாறை காட்சி முனையத்தில் விரிவாக்கப் பணிகள் மேற்கொள்வதால், சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறை தடைவிதித்துள்ளது. நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை சிறந்த சுற்றுலா தளமாக இருந்து வருகிறது. அண்டை மாநிலங்கள் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர் கொல்லிமலையில் முக்கிய பொழுது போக்கு அம்சமாக செம்மேடு அடுத்துள்ள சிக்குப்பாறை காட்சி முனையம் அமைந்துள்ளது. இங்கு அமைக்கப்பட்டு உள்ள வியூ பாயிண்ட்டில் இருந்து அடிவாரம் பகுதியில் உள்ள காளப்பநாயக்கன்பட்டி, சேந்தமங்கலம், நாமக்கல், துறையூர் உள்ளிட்ட பகுதிகளை கண்டு ரசிக்கலாம். இந்நிலையில் சீக்குப்பாறை காட்சி முனையம், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு நலன் கருதி, சில மாதங்களுக்கு முன்பு அங்கு பராமரிப்பு பணிகள் நடைபெற்று வந்தது. அவை முடிந்து சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டுக்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு திறக்கப்பட்டது. தற்போது விரிவாக்க பணிகள் நடைபெற உள்ளதாலும், மழை பெய்து வருவதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு நலன் கருதி, சீக்குப்பாறை காட்சி முனையத்திற்கு சுற்றுலா பயணிகள் செல்வதற்கு, வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை