கொல்கத்தா மாநகராட்சிக்கு மே.வங்க அமைச்சர் மேயராக நியமனம்

கொல்கத்தா: கொல்கத்தா நகர மேயராக மேற்கு வங்க மாநிலத்தின் போக்குவரத்து அமைச்சர் பிர்கத் ஹக்கீம் நியமிகப்பட்டுள்ளார். அதின் கோஷ் துணை மேயராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில் கொல்கத்தா மாநகராட்சி தேர்தல் கடந்த 19ம் தேதி பலத்த பாதுகாப்புடன் நடத்தப்பட்டது. மொத்தம் 4,949 வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு நடந்தது. இதற்கான வாக்கு எண்ணிக்கை கடந்த 21ம் தேதி நடைபெற்றது. இதில் 3வது முறையாக திரிணாமுல் காங்கிரஸ் கொல்கத்தா மாநகராட்சியில் வென்று ஹாட்ரிக் சாதனை படைத்தது. மொத்தமுள்ள 144 வார்டுகளில், 72 சதவீத வாக்குகளை பெற்று, 134 இடங்களில் திரிணாமுல் வெற்றி பெற்றது.இந்நிலையில், இம்மாநிலத்தின் போக்குவரத்து அமைச்சர் பிர்கத் ஹக்கீம் கொல்கத்தா நகர மேயராக நியமிக்கப்பட்டுள்ளார். அதின் கோஷ் துணை மேயராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். கட்சியில் `ஒருவருக்கு ஒரு பதவி’ என்ற திட்டத்தை மம்தாவின் உறவினரும் கட்சியின் பொது செயலாளருமான அபிஷேக் பானர்ஜி அமல்படுத்த முயற்சிப்பதால், ஹக்கீமின் நியமனம் உறுதி செய்யப்படாமல் இருந்தது. பின்னர், மம்தா தலையிட்டு ஹக்கீமை நியமித்ததாக கூறப்படுகிறது….

Related posts

ஹத்ராஸ் நெரிசலில் சிக்கி 123 பேர் உயிரிழந்த சம்பவத்தில் சாமியாரின் உதவியாளர் கைது

121 பேரை பலி கொண்ட விபத்து ஹத்ராஸில் ராகுல் காந்தி நேரில் ஆறுதல்

கேரளாவில் பரவும் காய்ச்சல் 310 பன்றிகளை கொல்ல முடிவு