கொல்கத்தா சம்பவத்திற்கு நீதி கோரி தூத்துக்குடியில் கல்லூரி மாணவிகள் போராட்டம்

 

தூத்துக்குடி, செப். 11: மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் ஆர்.எம்.ஜி.கர் அரசு மருத்துவமனையில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்து கொடூர மாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதை கண்டித்தும், இச்சம்பவத்திற்கு நீதி வழங்க கோரியும், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுத்து நிறுத்த வலியுறுத்தியும் நாடு முழுவதும் தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன. கொல்கத்தாவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் நேற்று முதல் பணிக்கு திரும்ப வேண்டுமென உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.

இந்நிலையில் தூத்துக்குடியில் புனித மரியன்னை பெண்கள் கல்லூரி மாணவிகள் நேற்று கருப்பு உடை அணிந்தவாறு கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி வழங்க கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று காலை கல்லூரி முன்பாக திரண்ட சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவிகள், பெண்களுக்கு எதிரான குற்றங்களை உடனடியாக தடுத்து நிறுத்த ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோஷமிட்டனர். பின்னர் வழக்கம் போல் கல்லூரி வகுப்பில் பங்கேற்றனர்.

Related posts

மணல் கடத்திய டிராக்டர் டிப்பர் பறிமுதல்

உளுந்தூர்பேட்டையில் அக். 2ம் தேதி விசிக மது ஒழிப்பு மகளிர் மாநாடு ஆயத்தப் பணி

ஆசிரியரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்