கொல்கத்தா காப்பகத்தில் இருந்து தத்தெடுத்த 2 குழந்தைகளுக்கு பாலியல் துன்புறுத்தல்: டெல்லி தம்பதியர் மீது போக்சோ வழக்கு

கொல்கத்தா: கொல்கத்தா காப்பகத்தில் இருந்து தத்தெடுக்கப்பட்ட இரண்டு குழந்தைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த தம்பதியர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். டெல்லி என்.சி.ஆரின் குர்கிராமில் வசிக்கும் தம்பதியர் இந்த ஆண்டு மார்ச் 30ம் தேதி கொல்கத்தாவில் உள்ள குழந்தைகள் மறுவாழ்வு இல்லத்தில் இருந்து இரண்டு வயது பெண் குழந்தையையும், நான்கு வயது ஆண் குழந்தையையும் தத்தெடுத்தனர். பின்னர் ஜூலை 12ம் தேதி, அந்த இரண்டு குழந்தைகளையும் மறுவாழ்வு இல்லத்தில் திரும்ப ஒப்படைத்து விட்டனர். மேற்கண்ட இரண்டு குழந்தைகளையும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி பார்த்த போது, அவர்கள் இருவரும் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு சித்திரவதைக்கு ஆளாகி இருப்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து கொல்கத்தா மறுவாழ்வு மையத்தின் நிர்வாகி தீபக் சின்ஹா, தம்பதியினர் மீது ரவீந்திர சரோபர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் தம்பதிகள் நிதின் சர்மா மற்றும் அவரது மனைவி மீது வழக்குபதிவு செய்தனர். மேலும், இதே விவகாரம் தொடர்பாக குர்கிராம் போலீசாரும் தம்பதியர் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்துள்ளனர். இதுகுறித்து குர்கிராம் போலீஸ் அதிகாரி முகேஷ் கூறுகையில், ‘தத்தெடுக்கப்பட்ட இரு குழந்தைகளும் உடன்பிறப்புகள். அவர்கள் குழந்தைகள் காப்பகத்திற்கு திருப்பி அனுப்பப்படுவதற்கு முன்பு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டனர். அதில் இருவரும் பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் துன்புறுத்தலுக்கு ஆளாகி இருப்பது பரிசோதனையில் தெரியவந்தது. அதையடுத்து தம்பதி மீது வழக்குபதிவு செய்துள்ளோம்’ என்றார்….

Related posts

வேலை பார்த்த இடத்தில் உரிமையாளர் என ஏமாற்றி வசூல் ஓட்டலில் பங்குதாரராக சேர்ப்பதாக ரூ.1.25 கோடி மோசடி செய்த மேலாளர்: ஆந்திராவில் பதுங்கியவர் கைது

வெளிநாடுகளில் விற்பனை செய்ய காரில் கடத்திய ரூ.22 கோடி மதிப்பிலான சிலைகள் மீட்பு: 3 பேர் கைது

பேச மறுத்ததால் ஆத்திரம் கள்ளக்காதலி, தொழிலாளி சரமாரி வெட்டிக் கொலை: அரிவாளுடன் முதியவர் போலீசில் சரண்