Saturday, July 6, 2024
Home » கொல்கத்தாவை வீழ்த்தியது குஜராத்

கொல்கத்தாவை வீழ்த்தியது குஜராத்

by kannappan

மும்பை: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், குஜராத் டைட்டன்ஸ் அணி 8 ரன் வித்தியாசத்தில் போராடி வென்றது. டி.ஒய்.பாட்டீல் அரங்கில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பேட் செய்தது. தொடக்க வீரர்களாக சாஹா, கில் களமிறங்கினர். கில் 7 ரன் மட்டுமே எடுத்து சவுத்தீ வேகத்தில் விக்கெட் கீப்பர் சாம் பில்லிங்ஸ் வசம் பிடிபட்டார். அடுத்து சாஹாவுடன் கேப்டன் ஹர்திக் பாண்டியா இணைந்தார். இருவரும் 2வது விக்கெட்டுக்கு 75 ரன் சேர்த்தனர்.சாஹா 25 ரன் (25 பந்து, 2 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்து உமேஷ் வேகத்தில் வெங்கடேஷிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 3வது விக்கெட்டுக்கு ஹர்திக் – மில்லர் அதிரடி காட்ட, குஜராத் ஸ்கோர் கணிசமாக உயர்ந்தது. ஹர்திக் 36 பந்தில் அரை சதம் அடித்தார். மில்லர் 27 ரன் (20 பந்து, 1 பவுண்டரி, 2 சிக்சர்), ஹர்திக் 67 ரன் (49 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி பெவிலியன் திரும்பினர். ரஸ்ஸல் வீசிய கடைசி ஓவரில் அபினவ் மனோஹர் (2), பெர்குசன் (0), திவாதியா (17 ரன்), யஷ் தயால் (0) ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்து அணிவகுக்க, குஜராத் 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 156 ரன் குவித்தது. அந்த அணி கடைசி 17 பந்தில் 6 விக்கெட் இழந்தது குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து, 157 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா களமிறங்கியது. கேகேஆர் அணி 6.1 ஓவரில் 34 ரன்னுக்கு 4 விக்கெட் இழந்து தடுமாறியது. கடைசி கட்டத்தில் ரஸ்ஸல் – உமேஷ் இணைந்து வெற்றிக்காகப் போராடினர். ரஸ்ஸல் அரை டஜன் சிக்சர்களை தூக்க, ஆட்டம் பரபரப்பானது. அவர் 48 ரன் (25 பந்து, 1 பவுண்டரி, 6 சிக்சர்) விளாசி, கடைசி ஓவரின் 2வது பந்தில் ஆட்டமிழக்க, கொல்கத்தா போராட்டம் முடிவுக்கு வந்தது. அந்த அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 148 ரன் எடுத்து, 8 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. …

You may also like

Leave a Comment

ten + 13 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi