கொலை, பலாத்காரம் செய்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்பிய 2 பேர் கைது: சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு

சென்னை: கேரள மாநிலம் ஆலப்புழாவை சேர்ந்தவர் ஜோபின் ஜோஸ் (27). இவர் மீது ஆலப்புழா காவல் நிலையத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு பாலியல் பலாத்காரம், பெண்களை மிரட்டுதல் ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனால், ஜோபின் ஜோஸ் வெளிநாட்டுக்கு தப்பி தலைமறைவாகிவிட்டார். இதையடுத்து ஆலப்புழா மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, ஜோபின் ஜோஸ்சை தேடப்படும் தலைமறைவு குற்றவாளியாக அறிவித்தார். இந்நிலையில் நேற்று அதிகாலை துபாயில் இருந்து ஃப்ளை துபாய் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் கேரள வாலிபர் ஜோபின் ஜோசும் வந்திருந்தார். அவருடைய பாஸ்போர்ட்டை குடியுரிமை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது, இவர் தேடப்படும் தலைமறைவு குற்றவாளி என்பது தெரியவந்தது. உடனே ஜோபின் ஜோஸ்சை குடியுரிமை அலுவலக அறையில் அடைத்து வைத்தனர். இந்நிலையில் இலங்கையில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று அதிகாலை சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் ராமநாதபுரத்தை சேர்ந்த செல்வக்குமார் (34) என்ற பயணியின் பாஸ்போர்ட்டை கம்ப்யூட்டரில் ஆய்வு செய்தனர். அவர் ராமநாதபுரம் போலீசாரால் 8 ஆண்டுகளாக, தேடப்படும்  தலைமறைவு குற்றவாளி என்று தெரியவந்தது. இவர் மீது கடந்த 2014ம் ஆண்டு திருப்புலானி காவல் நிலையத்தில் கொள்ளை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அவர் வெளிநாட்டிற்கு தப்பிவிட்டார். தற்போது இலங்கையிலிருந்து சென்னை வந்துள்ளார். செல்வகுமாரை பிடித்து ஒரு அறையில் அடைத்து வைத்தனர். இது குறித்து சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு அதிகாரிகள் தகவல் கொடுத்துள்ளனர்….

Related posts

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு சிறுவன் மீது போக்சோ வழக்கு

பிளஸ் 1 மாணவி பாலியல் பலாத்காரம்: அத்தையின் கணவர் கைது

மேட்ரிமோனியல் மூலம் டிஎஸ்பி, பைனான்சியர் உள்பட 50 பேரை ஏமாற்றி திருமணம் செய்த கல்யாண ராணி சிக்கியது எப்படி?: பரபரப்பு தகவல்கள்