கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக கொடநாடு எஸ்டேட்டில் சிபிசிஐடி டிஜிபி ஷகீல் அக்தர் நேரில் விசாரணை..!!

நீலகிரி: நீலகிரி மாவட்டம் கொடநாடு எஸ்டேட்டில் சிபிசிஐடி டிஜிபி ஷகீல் அக்தர் தலைமையிலான குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர். நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கொடநாடு பகுதியில் 2017ம் ஆண்டு ஏப்ரல் 23ல் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான பங்களாவில் கொலை, கொள்ளை சம்பவம் நடைப்பெற்றது. அத்துடன் பங்களாவிற்குள் சென்று ஜெயலலிதா மற்றும் சசிகலா தங்கும் அறைகளில் இருந்த பல்வேறு ஆவணங்கள் மற்றும் பொருட்களை கொள்ளையடித்து சென்றது. இது தொடர்பாக ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுனர் கனகராஜ், கேரளாவை சேர்ந்த சயான், வாளையாறு மனோஜ் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டு அனைவரும் தற்போது ஜாமினில் உள்ளனர். இந்த கொடநாடு கொலை கொள்ளை சம்பவம் நடைபெற்று ஒரே மாதங்களில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுனர் கனகராஜ் சேலம் ஆத்தூர் பகுதியில் சாலை விபத்தில் மர்மமான முறையில் உயிரிழந்தார். அதேபோல் இரண்டாவது குற்றவாளியாக கருதப்பட்ட கேரளாவை சேர்ந்த சயான் குடும்பத்துடன் கோவையில் இருந்து பாலக்காடு செல்லும் போது மர்ம வாகனம் மோதியதில் சயான் மனைவி மற்றும் அவரது குழந்தை துடிதுடித்து உயிரிழந்தனர். இதனிடையே, இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து டிஜிபி உத்தரவிட்டார். இந்நிலையில், கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை, கொள்ளை தொடர்பாக சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணையை தொடங்கியுள்ளனர். முதற்கட்டமாக ஓம் பகதூர் கொலை நடந்த இடத்தில் சிபிசிஐடி காவல்துறையினர் ஆய்வு நடத்தி வருகின்றனர். ஓம்பகதூரை கொன்று ஆவணங்களை கொள்ளையடித்தது பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தொடர்ந்து, கொடநாடு எஸ்டேட் பங்களாவின் மேலாளர், அங்கு பணிபுரியும் காசாளர் மற்றும் கணக்கீட்டாளரிடம் விசாரணை நடத்தப்படவுள்ளது. தனிப்படை காவல்துறை ஏற்கனவே விசாரித்து வந்த நிலையில் அண்மையில் சிபிசிஐடி வசம் வழக்கு ஒப்படைக்கப்பட்டது. …

Related posts

அமைச்சர் சேகர்பாபு தலைமையில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை

தமிழ்நாடு பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு தீர்மானத்திற்கு ஒப்புதல் தர வேண்டும்: திமுக எம்.பி. ராஜேஷ்குமார் வலியுறுத்தல்

கள்ளக்குறிச்சி விஷசாராய மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் ஆணையத்தின் 4 முக்கிய பணிகள்: அரசிதழில் வெளியீடு