கொரோனா 3வது அலை வந்தாலும் பொருளாதாரம் பெரிதாக பாதிக்காது: நிதி ஆயோக் துணைத் தலைவர் கருத்து

புதுடெல்லி: ‘கொரோனா முதல் 2 அலைகளை விட 3வது அலையில் பொருளாதார பாதிப்பு மிகக் குறைவான அளவே இருக்கும்,’ என நிதி ஆயோக் துணைத்தலைவர் ராஜீவ் குமார் கூறி உள்ளார். கொரோனா முதல் மற்றும் 2வது அலையால் நாட்டின் பொருளாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டது. கடந்த மார்ச் 31ம் தேதியுடன் முடிவடைந்த 2020-21ம் நிதியாண்டிற்கான பொருளாதார வளர்ச்சி மைனஸ் 7.3 சதவீதமாக சரிந்தது. இதனால், நடப்பாண்டின் பொருளாதார வளர்ச்சியிலும் கொரோனா பாதிப்பின் தாக்கம் இருக்கும் என பல ஆய்வு நிறுவனங்கள் கணித்துள்ளன. நடப்பாண்டில் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை இந்தியா எட்டும் என முன்பு கூறிய ஆய்வு நிறுவனங்கள் தற்போது ஒற்றை இலக்கமாக குறைத்துள்ளன. எஸ் அண்ட் பி குளோபல் ரேட்டிங்கில் இந்தியாவின் வளர்ச்சி 9.5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. முதலில் 12.8 சதவீதமாக கணித்த பிட்ச் ரேட்டிங் தற்போது 10 சதவீதமாக குறைத்துள்ளது. 2022 மார்ச் 31ம் தேதியுடன் முடியும் நடப்பு நிதியாண்டின் வளர்ச்சி 9.5 சதவீதமாக இருக்கும் என ரிசர்வ் வங்கியும் கூறி உள்ளது. இது குறித்து, ஒன்றிய அரசிற்கு ஆலோசனை வழங்கும் நிதி ஆயோக் அமைப்பின் துணைத் தலைவர் ராஜீவ் குமார் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:நாம் கொரோனா தொற்றிலிருந்து கடந்து வந்துள்ளோம். இப்போது பல்வேறு துறைகளில் சிறந்த அறிகுறிகள் தென்படுவதால், நடப்பு நிதியாண்டின் இரண்டாம் பாதியில் பொருளாதார நடவடிக்கைகள் பலப்படும். பொருளாதார மீட்சி மிகவும் வலுவாக இருக்கும். எனவே, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி இரட்டை இலக்கங்களில் இருக்கும் என்று நம்புகிறேன். இரும்பு, சிமென்ட், ரியல் எஸ்டேட் போன்ற நுகர்வோரை சார்ந்த துறைகள் மீள்வதற்கு சற்று அதிக நேரம் ஆகலாம். ஏனெனில் தொற்றுநோய் காரணமாக நிச்சயமற்ற தன்மை இருப்பதால், நுகர்வோர்கள் சற்று தயங்குகின்றனர். எனவே, தனியார் முதலீடு மீட்பு, இந்த ஆண்டின் 3ம் காலாண்டில் எதிர்பார்க்கலாம்.கொரோனா 3வது அலையை எதிர்கொள்ள அரசு மிகவும் தயாராக இருக்கிறது. 3வது அலை வந்தாலும் பொருளாதாரத்தின் மீதான அதன் தாக்கம் குறைவாகவே இருக்கும். முதல் 2 அலைகளைக் காட்டிலும் 3வது அலையால் பொருளாதாரம் பெரிய அளவில் பாதிக்கப்படாது. ஒன்றிய அரசின் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளன. அதே போல மாநில அரசுகளும் முந்தைய அலைகளில் இருந்து பாடம் கற்றுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.42,506 பேருக்கு தொற்று* நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு, பலி எண்ணிக்கையை ஒன்றிய சுகாதார அமைச்சகம் நேற்று காலை 8 மணிக்கு வெளியிட்டது.* கடந்த 24 மணி நேரத்தில், புதிதாக 41,506 பேர் தொற்றால் பாதித்துள்ளனர். மொத்த பாதிப்பு 3 கோடியே 8 லட்சத்து 37 ஆயிரத்து 222 ஆக உள்ளது.* கடந்த 24 மணி நேரத்தில் 895 பேர் பலியாகி உள்ளனர். மொத்த பலி 4 லட்சத்து 8 ஆயிரத்து 40 ஆகும்.* சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 4 லட்சத்து 54 ஆயிரத்து 118.* இதுவரை 37.60 கோடி டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. …

Related posts

காக்கிநாடாவில் பரபரப்பு ஒய்எஸ்ஆர் காங். மாஜி எம்எல்ஏ கட்டிடத்தை இடித்த அதிகாரிகள்

74000 பேர் பனிலிங்க தரிசனம்

கேரள டிஜிபியின் மனைவியின் நிலம் ஜப்தி செய்யப்பட்ட விவகாரத்தில் புதிய திருப்பம்: சுமூக தீர்வு ஏற்பட்டதால் வழக்கு வாபஸ்