கொரோனா வைரஸ் தாக்குதல் 4.5 லட்சத்தை எட்டியது பலி

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா வைரசினால் பாதித்து பலியானோரின் மொத்த எண்ணிக்கை 4.5 லட்சத்தை நெருங்குகிறது. அமெரிக்கா, பிரேசிலுக்கு அடுத்து இந்தியாவில் கடந்த ஜூலை முதல் வாரத்தில் 4 லட்சம் பேர் உயிரிழந்ததாக அதிகார்ப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. தற்போது 3 மாதங்கள் கடந்த நிலையில், இந்த எண்ணிக்கை 4.5 லட்சத்தை நெருங்கி உள்ளது. கொரோனா பாதிப்பு, பலி உள்ளிட்ட விவரங்கள் குறித்து ஒன்றிய சுகாதார அமைச்சகம் நேற்று காலை 8 மணிக்கு வெளியிட்ட அறிக்கை விவரம் வருமாறு:* நேற்று ஒரே நாளில் 22,431 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் தொற்று பாதிப்பு தொடர்ந்து 13வது நாளாக 30,000க்கு குறைவாக உள்ளது.* தினசரி தொற்று பாதித்தோர் எண்ணிக்கை கடந்த 204 நாட்களில் இல்லாத அளவு சரிந்து தற்போது 2,44,198 ஆக இருக்கிறது. மொத்த தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 3,38,94,312 ஆக இருக்கிறது.* கடந்த 24 மணி நேரத்தில் 318 பேர் தொற்றுக்கு பலியானதைத் தொடர்ந்து மொத்த பலி 4,49,856 ஆக உயர்ந்துள்ளது. * நாடு முழுவதும் இதுவரை 92.63 கோடிக்கும் அதிகமான தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன.      கவனமாக இருங்கள்; அரசு எச்சரிக்கைஅக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்கள் பண்டிகை, திருமண உள்ளிட்ட கொண்டாட்டங்களின் காலமாக இருப்பதால் கொரோனா தொற்று அதிகரிக்க ஏராளமான வாய்ப்பு உள்ளது. எனவே, இக்கால கட்டத்தில் மக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்த்து, பண்டிகைகளை விழிப்புணர்வுடன் கொண்டாட வேண்டும் என்று ஒன்றிய சுகாதார அமைச்சகம் மக்களை எச்சரித்துள்ளது….

Related posts

பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு: சென்னை, புதுச்சேரியில் நடந்தது

நீட் முறைகேடு தொடர்பான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை

குறைகள் கண்டறியப்பட்டால் ஜூலை 15 முதல் 19 வரை க்யூட் – யுஜி மறுதேர்வு: தேசிய தேர்வு முகமை அறிவிப்பு