கொரோனா விதிமுறையை பின்பற்றாமல் சார்பதிவாளர் அலுவலகங்களில் குவியும் மக்களால் தொற்று அபாயம்

தாம்பரம்: சென்னை கிழக்கு தாம்பரம், எம்.இ.எஸ். சாலை, பாரத மாதா சாலை, குரோம்பேட்டை, நியூ காலனி, 2வது பிரதான சாலைகளில் தாம்பரம், சேலையூர், பல்லாவரம் சார்பதிவாளர் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு தினமும் தாம்பரம், சேலையூர், பல்லாவரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மக்கள் பத்திரப்பதிவுக்கு வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் கொரோனாவின் 2வது அலை அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளுடன்  ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இதனால் பொதுஇடங்களில் அதிகளவில் கூடக்கூடாது, அத்தியாவசிய தேவைக்கு மட்டுமே மக்கள் வீட்டைவிட்டு வெளியே வரவேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு வருபவர்கள் முகக்கவசம், சமூக இடைவெளி, கிருமிநாசினி போன்றவற்றை கட்டாயம் பயன்படுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது. ஆனால், அரசு உத்தரவுகளை சார்பதிவாளர் அலுவலகங்களில் முறையாக யாரும் பின்பற்றுவதில்லை. குறிப்பாக, தாம்பரம், சேலையூர், பல்லாவரம் ஆகிய பகுதிகளில் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப்பதிவிற்கு வரும் பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றாமலும் முகக்கவசம் அணியாமலும் வந்து செல்வதால் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவிக்கின்றனர். மேலும், கொரோனாவை பயன்படுத்தி முழுக்க முழுக்க புரோக்கர்களின் கட்டுப்பாட்டில் சார்பதிவாளர் அலுவலகங்கள் இயங்கி வருவதாகவும் புகார் கூறப்படுகிறது. சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘‘சார்பதிவாளர் அலுவலகங்களில் புரோக்கர்களுக்கு முன்னுரிமை தராமல் பொதுமக்களுக்கு முன்னுரிமை கிடைக்க செய்வதோடு கொரோனா விதிமுறைகளை முறையாக பின்பற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நட வடிக்கை எடுக்கவேண்டும்’’ என்றனர்….

Related posts

குப்பையில் கிடந்த துப்பாக்கி

வீட்டை இடிக்க அதிகாரிகள் வந்ததால் நடுரோட்டில் தீக்குளித்த வாலிபர்: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

மழைநீர் கால்வாயை முறையாக அமைக்காததால் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீர்: நடவடிக்கை கோரி பெண்கள் மறியல்