கொரோனா முகாமில் இருந்து வந்ததாக கூறி மர்ம நபர் கொடுத்த மாத்திரையை தின்ற பெண் பரிதாப சாவு: 3 பேருக்கு சிகிச்சை

ஈரோடு: ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே  வடுகம்பாளையம் கே.ஜி. வலசு பெருமாள் மலையை சேர்ந்தவர் கருப்பண்ணன்  (59). விவசாயி. இவரது மனைவி மல்லிகா (55), மகள் தீபா (28). இவர்களும் முருங்கை தொழுவை சேர்ந்த சின்னப்பன் மனைவி குப்பம்மாளும் (70) நேற்று காலை தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது,  28 வயது மர்ம நபர் அங்கு வந்தார். அவர் கொரோனா சிறப்பு  முகாமில் இருந்து வருவதாக கூறி, அவர்களிடம் மாத்திரைகளை கொடுத்து இதை சாப்பிட்டால்தான் கொரோனா  பாதிப்பு வராது என கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து அவர்களும் மாத்திரையை சாப்பிட்டுள்ளனர்.  சில மணி நேரத்தில்4 பேருக்கும் மயக்கம் ஏற்பட்டுள்ளது. அப்பகுதியினர் 4 பேரையும் மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வழியிலேயே மல்லிகா இறந்து விட்டதாக தெரிவித்தனர். கருப்பண்ணன், தீபா, குப்பம்மாளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.  மாத்திரை வழங்கிய மர்ம ஆசாமியை சென்னி மலை போலீசார் தேடி வருகின்றனர். …

Related posts

ஆலத்தூர் டாஸ்மாக் கடைக்குள் சென்று கலெக்டர் அதிரடி ஆய்வு

கள்ளக்குறிச்சி விஷச் சாராய சம்பவத்தில் 8.6 முதல் 29.7 சதவீதம் மெத்தனால் கலப்பு: ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு அறிக்கை தாக்கல்

கன்னியாகுமரிக்கு கூடுதல் ரயில் திட்டங்கள்: மக்களவையில் விஜய்வசந்த் வலியுறுத்தல்