கொரோனா பாதிப்பு: 18 ஆயிரமாக குறைந்தது: ஒரே நாளில் 31,045 பேர் குணமடைந்தனர்

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 18 ஆயிரமாக குறைந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 31,045 பேர் குணமடைந்தனர்.  இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் நேற்று 1,70,112 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், 18,023 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதுவரையில் தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 22,74,704 ஆக உயர்ந்துள்ளது. தனிமைப்படுத்துதல் மற்றும்  மருத்துவமனைகளில்  2,18,595 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேபோல், மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 31,045 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினர். தமிழகத்தில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 20,28,344 ஆக உயர்ந்துள்ளது. மேலும், மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 409 பேர் நேற்று உயிரிழந்தனர். இதில், அரசு மருத்துவமனைகளில் 259 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 150 பேரும் ஆவர். சென்னையில் நேற்று 1,437 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. சென்னையை தொடர்ந்து கோவையில் 2,439 பேருக்கும், ஈரோட்டில் 1,596 பேருக்கும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த மூன்று மாவட்டங்களை தவிர்த்து மற்ற அனைத்து மாவட்டங்களிலும் தொற்று பாதிப்பு ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது.  இறப்பை பொறுத்தவரையில் அதிகபட்சமாக சென்னையில் நேற்று 42 பேரும், கோவையில் 44 பேரும், திண்டுக்கல்லில் 22 பேரும், சேலம் 25 பேரும், திருவள்ளூர் 22 பேரும் உயிரிழந்துள்ளனர். …

Related posts

குப்பையில் கிடந்த துப்பாக்கி

வீட்டை இடிக்க அதிகாரிகள் வந்ததால் நடுரோட்டில் தீக்குளித்த வாலிபர்: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

மழைநீர் கால்வாயை முறையாக அமைக்காததால் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீர்: நடவடிக்கை கோரி பெண்கள் மறியல்