கொரோனா பரவல் குறைந்தது பொது போக்குவரத்து கேரளாவில் துவங்கியது: லாட்டரி விற்பனைக்கும் அனுமதி

திருவனந்தபுரம்: கேரளாவில் நேற்று முதல் முழு ஊரடங்கில் தளர்வுகள் செய்யப்பட்டதால், அரசு பஸ்கள், ஆட்டோ, டாக்சி உள்பட பொது போக்குவரத்து தொடங்கியது. கேரளாவில் கடந்த  ஒன்றரை மாதமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து நேற்று முதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. தொற்று விகிதம் 10க்கு கீழ், 10 முதல் 20 வரை, 20 முதல் 30 வரை, 30க்கு மேல் என்று 4 பகுதிகளாக பிரித்து தளர்வுகள் அமல்படுத்தப்படுகிறது. இந்நிலையில், தொற்று விகிதம் 20க்கு குறைவாக உள்ள பகுதியில் குறைந்த எண்ணிக்கையிலான பஸ் போக்குவரத்து நேற்று தொடங்கப்பட்டு உள்ளது. மாவட்டங்களுக்குள் மட்டுமே பஸ்கள் இயக்கப்படுகிறது. ஆட்டோ, டாக்சிகளும் இயக்கப்படுகின்றன. மதுக்கடைகளும் திறக்கப்பட்டன. கேரளாவில் 12 பஞ்சாயத்துகளில் மும்மடங்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. எந்த பகுதியிலும் தியேட்டர்கள், மால்கள், உடற்பயிற்சி மையங்கள், பொழுதுபோக்கு  மையங்கள் திறக்க அனுமதியில்லை. ஓட்டல்களில் அமர்ந்து சாப்பிட அனுமதி கிடையாது. சனி, ஞாயிறுக் கிழமைகளில் கேரளா முழுவதும் முழு ஊரடங்கு அமலில் இருக்கும். இதற்கிடையே, நேற்று முதல் லாட்டரி விற்பனை தொடங்கப்பட்டு உள்ளது. 25ம் தேதி முதல் லாட்டரி குலுக்கல் தொடங்கும். …

Related posts

ஹத்ராஸ் நெரிசலில் சிக்கி 123 பேர் உயிரிழந்த சம்பவத்தில் சாமியாரின் உதவியாளர் கைது

121 பேரை பலி கொண்ட விபத்து ஹத்ராஸில் ராகுல் காந்தி நேரில் ஆறுதல்

கேரளாவில் பரவும் காய்ச்சல் 310 பன்றிகளை கொல்ல முடிவு