கொரோனா பரவல் காரணமாக மின்கட்டணத்தை 31ம் தேதி வரை செலுத்தலாம்: மின்சாரவாரியம் அறிவிப்பு

சென்னை: தமிழக மின்வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கோவிட்-19 பரவுதலை கட்டுப்படுத்தும் பொருட்டு 10ம் தேதி முதல் 24.05.2021 வரை ஊரடங்கு அமல்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக, தாழ்வழுத்த மின்நுகர்வோர்களின் இடர்பாடுகளை கருத்தில் கொண்டு, தமிழக முதல்வரின் அறிவுறுத்தலின்படி, மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்துடன் கலந்தாய்வு நடத்தினார். இதில், தாழ்வழுத்த மின்நுகர்வோர்களின் மின்கட்டணம் மற்றும் இதர நிலுவை தொகை செலுத்துவதற்கான கடைசி நாள் 10.5.2021 முதல் 24.5.2021 வரை இருக்குமாயின், அத்தொகையினை செலுத்த 31.5.2021 வரை மின் துண்டிப்பு/மறு இணைப்புக் கட்டணமின்றி காலநீட்டிப்பு வழங்கப்படுகிறது. 10.05.2021 முதல் 24.05.2021 வரையிலான காலத்தில் (அதாவது முந்தைய மாத கணக்கீட்டிலிருந்து 60வது நாள் இந்த காலத்தில் இருப்பின்) மின்கணக்கீடு செய்ய வேண்டிய தாழ்வழுத்த மின்நுகர்வோர்கள், மே 2019ம் ஆண்டில் (கோவிட் இல்லாத காலம் என்பதால்) கணக்கீடு செய்யப்பட்ட தொகையினையே கணக்கீட்டுத் தொகையாக கருதி அந்த கட்டணத்தை செலுத்த வேண்டும். புதிய நுகர்வோர்கள் அல்லது அவ்வாறு கணக்கீடு இல்லாதவர்கள் மே 2021க்கான முந்தைய மாத கணக்கீட்டு பட்டியல்படி அதாவது மார்ச் 2021ன் கணக்கீட்டுப்படி மின்கட்டணம் செலுத்தலாம். அதாவது மே 2021ற்கான கட்டணம் ஜூலை 2021ல் முறைபடுத்தப்படும். மே 2021ற்கான கணக்கீட்டுத்தொகை விபரம் மின்நுகர்வோர்களின் பதிவு செய்யப்பட்ட கைப்பேசி எண்ணிற்கு குறுஞ்செய்தியாக அனுப்பி வைக்கப்படும். மேலும் மின்நுகர்வோர்கள் இந்த விபரத்தினை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் இணையதளத்திலும் (www.tangedco.gov.in) தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது….

Related posts

பெண்ணிடம் ₹2.50 லட்சம் மோசடி விவகாரம் வடசென்னை மாவட்ட பாஜ செயலாளர் கைது: தனிப்படை போலீசார் அதிரடி

சென்னையில் கடந்த 3 ஆண்டுகளில் சாலைகளில் சுற்றித்திரிந்த 6,876 ஆதரவற்றோர் மீட்பு

பழவேற்காடு – காட்டுப்பள்ளி இடையே உள்ள சாலையில் மீண்டும் கடல் சீற்றத்தால் மணல் திட்டுகள்:  வாகன ஓட்டிகள் அவதி  பாலம் அமைத்து தர கோரிக்கை