Monday, September 9, 2024
Home » கொரோனா பரவலை தடுக்க தமிழகத்தில் வரும் 10ம் தேதி முதல் திருவிழா, மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தடை: தமிழக அரசு அறிவிப்பு..!

கொரோனா பரவலை தடுக்க தமிழகத்தில் வரும் 10ம் தேதி முதல் திருவிழா, மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தடை: தமிழக அரசு அறிவிப்பு..!

by kannappan

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவலை அதிகரித்து வருவதை முன்னிட்டு கோயில் திருவிழா, பேருந்துகளில் நின்று பயணிக்க தமிழக அரசு தடை விதித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்; * கொரோனா பரவலை தடுக்க தமிழகத்தில் வரும் 10ம் தேதி முதல் திருவிழா, மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தடை: தமிழக அரசு அறிவிப்பு* கோயம்பேடு வணிக வளாகத்தில் சில்லறை வியாபார கடைகள் வரும் 10ம் தேதி முதல் செயல்பட தடை..!* பேருந்துகளில் பயணிகள் நின்றவாறு பயணிக்க அனுமதி இல்லை: தமிழக அரசு அறிவிப்பு* தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் 50% இருக்கைகளை மட்டுமே பயன்படுத்த அனுமதி: தமிழக அரசு அறிவிப்பு* திருமண விழாக்களில் 100 பேருக்கு மிகாமல் மட்டுமே பங்கேற்க வேண்டும்: தமிழக அரசு அறிவிப்பு* தேனீர் கடை மற்றும் உணவகங்களில் 50% பேர் மட்டுமே அனுமதிக்க வேண்டும்: தமிழக அரசு அறிவிப்பு* தமிழகத்தில் அனைத்து வழிபாட்டுத் தளங்களிலும் இரவு 8 மணி வரை மட்டுமே பொதுமக்களுக்கு அனுமதி…!* வணிக வளாகங்கள் 50% விழுக்காடு வாடிக்கையாளர்களுடன் இரவு 11 மணி வரை செயல்பட அனுமதி

* மாவட்டங்களுக்கு இடையேயான அரசு மற்றும் தனியார் பேருந்தும் மற்றும் சென்னையில் இயக்கப்படும் மாநகரப் பேருந்துகளில் உள்ள இருக்கைகளில் மட்டும் பயணிக்கலாம் அமர்ந்து பயணிக்க அனுமதி. பேருந்துகளில் நின்று பயணம் செய்ய அனுமதி இல்லை.
* ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர்த்து 2 பேர் மட்டுமே பயணம் செய்ய அனுமதி
* வாடகை மற்றும் டாக்ஸி வாகனங்களில் ஓட்டுநர் தவிர்த்து 3 பேர் மட்டுமே பயணிக்க அனுமதி..!* வெளி மாநிலங்களில் இருந்து வருவோருக்கு இ-பாஸ் கட்டாயம்

You may also like

Leave a Comment

19 − 12 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi