கொரோனா நோய் தடுப்பு பணி முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு திமுக அறக்கட்டளை 1 கோடி நிதி: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: கொரோனா நோய்தடுப்பு பணிகளுக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு திமுக அறக்கட்டளை சார்பில் 1 கோடி நிதி வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.  தமிழகத்தில் கொரோனா வைரஸ் அதி வேகமாக பரவி வருவதால், கொரோனா தடுப்பு பணிகளுக்கு அதிகமான நிதி தேவைப்படுகிறது. இதனால், முதல்வர் பொது நிவாரண நிதிக்கு, நிதி வழங்குமாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பொதுமக்கள், சமூக நல அமைப்புகள் மற்றும் பெருந்தொழில் நிறுவனங்களுக்கு கோரிக்கை விடுத்தார்.  தற்போது ஒன்றரை லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். வரலாறு காணாத அளவுக்கு நோய் தொற்று பரவியுள்ளது. மக்களை காக்க அரசு அனைத்து கட்ட நடவடிக்கை எடுத்து வருகிறது. அரசுக்கு உதவி கரம் நீட்டுங்கள் என்று அவர் தெரிவித்திருந்தார்.முதல்வரின் கோரிக்கையை ஏற்று பல தொழில் நிறுவனங்கள் நிவாரண நிதிக்கு நிதியுதவி அளித்து வருகின்றன. இந்நிலையில், முதல்வர் பொது நிவாரண நிதிக்கு திமுக அறக்கட்டளை சார்பில் 1 கோடி நிதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  கொரோனா நோய்த் தடுப்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக தமிழக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு திமுக அறக்கட்டளை சார்பில் 1 கோடி  நிதி வழங்கப்படும் என்று முதல்வரும், திமுக அறக்கட்டளை தலைவருமான மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். …

Related posts

புரசைவாக்கம் திடீர் நகரில் அடிப்படை வசதிகள் கோரி கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

ஐ.டி துறை சார்ந்த பட்டதாரிகள் நலன் கருதி மாதவரத்தில் ஹைடெக் சிட்டி: வடசென்னை மக்கள் கோரிக்கை

96 வயது சுதந்திர போராட்ட வீரருக்கான ஓய்வூதிய பாக்கி ரூ.15 லட்சம் அரசால் வழங்கப்பட்டது: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்