கொரோனா தொற்று சங்கிலியை உடைத்து மக்களை காத்தவர் முதல்வர் மு.க.ஸ்டாலின்: அமைச்சர் சா.மு.நாசர் பேச்சு

திருத்தணி: திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக சார்பில், தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையை விளக்கியும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மாபெரும் வெற்றிப்பெற வைத்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தும் மாபெரும் பொதுக்கூட்டம் திருத்தணி கமலா தியேட்டர் அருகே நடைபெற்றது. கூட்டத்துக்கு திருவள்ளூர் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் திருத்தணி எம்.பூபதி தலைமை வகித்தார். திருத்தணி நகர மன்ற தலைவர் சரஸ்வதி பூபதி, நகர பொறுப்பாளர் வினோத்குமார் வரவேற்று பேசினர். மாநில விவசாய அணி துணை செயலாளர் ஆதிசேஷன், ஒன்றிய செயலாளர்கள் ஆர்த்தி ரவி, என்கே. கிருஷ்ணன், சீனிவாசன், எம்.ராஜேந்திரன், எஸ். மகாலிங்கம் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு விருந்தினராக பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் பேசியதாவது; முதல்வருக்கு எல்லாம் முதல்வராக நமது முதல்வர் மு.க.ஸ்டாலின் இருந்து வருகிறார். ஒவ்வொரு துறை அதிகாரிகளையும் அழைத்து அந்தத் துறை சம்பந்தப்பட்ட குறை, நிறைகளை கேட்டறிந்து அதற்கு தகுந்தாற்போல் நிதிநிலை அறிக்கை தயார் செய்துள்ளார். கொரோனா தொற்று சங்கிலித் தொடரை வெட்டி தூக்கி எறிந்து மக்களை காத்தவர் முதல்வர். ஆனால் தொற்று நோய் பரவி விடும் என்று கருதி தன்னுடைய தாடியை கூட எடுக்காமல் இருந்தவர்தான் இந்த மோடி. பாஜக ஆளும் மாநிலங்களில் எல்லாத்தையும் வஞ்சித்து வருகிறது. இவ்வாறு அமைச்சர் பேசினார். நிகழ்ச்சியில், எஸ். ஜெகத்ரட்சகன் எம்பி, தலைமைக்கழக பேச்சாளர் ஆவடி  ஜான், எம்எல்ஏக்கள் எஸ்.சந்திரன், திருவள்ளூர் வி.ஜி.ராஜேந்திரன், மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர்கள் திராவிட பக்தன், ரவீந்திரநாத், களாம்பாக்கம் பன்னீர்செல்வம்,  நாகன், வழக்கறிஞர் வி.கிஷோர் ரெட்டி உள்பட பலர் கலந்துகொண்டனர். வட்ட செயலாளர்கள் ரகுநாதன் நன்றி கூறினார்….

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு