கொரோனா திரிபுகளில் ஒமிக்ரான் கடைசியானதல்ல!: வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக கடைபிடியுங்கள்.. உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை..!!

ஜெனிவா: கொரோனா வைரஸ் உருமாற்றத்தில் ஒமிக்ரான் கடைசியாக இருக்காது என்றும் அடுத்த திரிபு தீவிர தொற்றுத்தன்மை கொண்டதாக இருக்கும் என்றும் உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் கொரோனா தொழில்நுட்ப ஆய்வு பிரிவின் தலைவர் மரியா வான் கெர்கோவ் வெளியிட்டுள்ள தகவலில், நமக்குக் கிடைத்துள்ள ஒமிக்ரான் தொடர்பான எண்ணிக்கைகள் வியக்கவைக்கிறது. ஆனால் அதே வேளையில் உண்மையான எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கும். இதற்கு முந்தைய அலைகளை எல்லாம் எண்ணிக்கை அளவில் ஒமிக்ரான் அலை தட்டையாக்கிவிட்டது.நாம் இன்னும் பெருந்தொற்றுக்கு இடையில் தான் இருக்கிறோம். நாம் அது முடியும் தருணத்தை நெருங்கவுள்ளோம். இன்னும் நிறைய நாடுகளில் இப்போது ஒமிக்ரான் உச்ச அலையில் இருக்கிறது. கொரோனா உயிரிழப்புகள் கடந்த சில வாரங்களாகவே தொடர்ந்து அதிகமாக இருப்பது வருத்தமளிக்கிறது. இன்னும் சில காலத்திற்கு கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை உலக மக்கள் தொடர வேண்டியிருக்கும் என்று கூறியுள்ளார். கொரோனா திரிபுகளில் ஒமிக்ரான் கடைசியாக இருக்காது என்று என்று கூறிய அவர், மேலும் சில திரிபுகள் மக்களை தாக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்தார். கொரோனாவின் அடுத்த திரிபு ஒமிக்ரானை விட வேகமாக தொற்றும் தன்மை கொண்டதாக இருக்கும் என்ற மரியா, அதற்கு பிறகும் சில திரிபுகள் ஏற்படக்கூடும் என்றார். அடுத்தடுத்த திரிபுகளுக்கு எதிராக தடுப்பூசிகளின் எதிர்ப்புத்திறன் குறையக்கூடும் என்ற அவர், எனினும் நோய் தொற்று ஆபத்தையும், உயிரிழப்பையும் தடுப்பூசி பெருமளவு தடுக்கும் என்றார். …

Related posts

குஜராத் மாநிலம் சூரத் அருகே சச்சின் பாலி பகுதியில் 4 மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து: 15 பேர் காயம்

ஜூலை 23ம் தேதி ஒன்றிய அரசு பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்..!!

ஜூலை 23-ல் ஒன்றிய அரசின் பட்ஜெட் தாக்கல்..!!