கொரோனா தடுப்பூசி போட்டவர்களை விட குணமானவர்களுக்கே அதிக எதிர்ப்பு சக்தி: புதிய ஆய்வில் தகவல்; தடுப்பூசி வேஸ்ட்டாம்…

புதுடெல்லி: தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களை விட, கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமானவர்களுக்கே நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருப்பதாக புதிய ஆய்வில் கூறப்பட்டுள்ளது. இஸ்ரேலின் டெல் அவிவ்வில் உள்ள மக்காபி சுகாதார மைய ஆய்வாளர்கள் சமீபத்தில் நடத்திய ஆய்வு முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளன. இந்த ஆய்வு முடிவுகள் இன்னும் பிற நிபுணர்களால் மதிப்பீடு செய்யப்படவில்லை. இதில், தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களை விட, கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமானவர்களுக்கே டெல்டா வைரசை விரட்டும் அளவுக்கு அதிக நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதாக கூறப்பட்டுள்ளது.அதாவது, ‘தடுப்பூசியால் கிடைக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை விட, கொரோனா தொற்றினால் பெறக் கூடிய நோய் எதிர்ப்பு சக்திக்கே அதிக வீரியம் உண்டு. இயற்கையாக பெறப்படும் இந்த நோய் எதிர்ப்பு சக்தியே, தடுப்பூசிகளைக் காட்டிலும் அதிக காலம் உடலில் நீடித்திருக்கும். மறுதொற்றில் இருந்தும் பாதுகாக்கிறது,’ என்று இந்த ஆய்வு கூறி உள்ளது. ஆனால், இந்த ஆய்வு முடிவு தடுப்பூசி போடும் மக்களின் ஆர்வத்தை குறைப்பதாக பிற ஆய்வாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.கொரோனா பாதிப்பால் கடுமையான நோய் அல்லது மரணம் ஏற்படுவது போன்ற வெளிப்படையான அபாயங்களைத் தவிர, தடுப்பூசி போட்டுக் கொண்ட மக்களுடன் ஒப்பிடும்போது, கொரோனாவில் இருந்து மீண்ட ஆரோக்கியமான மக்களுக்கு மாரடைப்பு, ரத்தம் உறைதல், பக்கவாதம் உள்ளிட்ட நீண்ட கால தீவிர உடல்நலப் பிரச்னைகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாக சமீபத்திய பிற ஆய்வுகள் கூறுகின்றன. எனவே, தடுப்பூசி மூலம் நீண்டகால நோய்கள் ஏற்படுவதை தவிர்க்க முடியும் என்கின்றனர் நிபுணர்கள். கொரோனா தொற்றியவர்களுக்கு ஒரு டோஸ் தடுப்பூசியே போதுமானது என்றும் சில உலக நாடுகள் கூறி வருவதும் குறிப்பிடத்தக்கது.* தடுப்பூசி டோஸ் 70 கோடி ஆனதுஇந்தியாவில் செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 70 கோடியை எட்டியிருப்பதாக ஒன்றிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த ஜனவரி 16ம் தேதி தடுப்பூசி செலுத்தக் தொடங்கிய நிலையில், 235 நாட்களில் இந்த இலக்கு எட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு 10 கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்த எடுத்துக் கொள்ளப்பட்ட நாட்கள்:டோஸ்    நாட்கள்10 கோடி    8520 கோடி    4530 கோடி    2940 கோடி    2450 கோடி    2060 கோடி    1970 கோடி    13…

Related posts

மணிப்பூர் முன்னாள் முதல்வர் வீட்டில் ராக்கெட் லாஞ்சர் மூலம் தாக்குதல்: ஒருவர் பலி, 5 பேர் படுகாயம்

மணிப்பூர்; முன்னாள் முதலமைச்சர் வீட்டில் ராக்கெட் லாஞ்சர் மூலம் தாக்குதல்!

5ஜி மொபைல் சந்தையில் முதல்முறையாக அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளி 2வது இடத்தை பிடித்துள்ளது இந்தியா!