கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை தீவிரப்படுத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை சுற்றறிக்கை

சென்னை: கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை தீவிரப்படுத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. பொது இடங்களில் கூட்டம் சேருவதை தடுக்க கண்காணிப்பை தீவிரப்படுத்த மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார். ஒமிக்ரான் தொற்று வேகமாக பரவிவரும் நிலையில் முகக்கவசம் அணிவது சமூக இடைவெளி உள்ளிட்ட தடுப்பு பணிகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.தமிழ்நாடு முழுவதும் ஒமிக்ரான் பரவல் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை 34 பேருக்கு ஒமிக்ரான் தொற்று ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பு நடைமுறைகளை அனைத்து மக்களும் கடைப்பிடிப்பதை அந்தந்த மாவட்ட நிர்வாகங்களும், மாநகராட்சி நிர்வாகங்களும் உறுதிப்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் தற்போது மக்கள் நல்வாழ்வுத்துறையின் முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். இந்த கடிதம் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், மாநகராட்சி ஆணையர்கள், மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.பொதுமக்கள் கூடக்கூடிய இடங்களில் பாதுகாப்பு விதிகளை கடைப்பிடிப்பதில் அலட்சியம் காட்டக்கூடிய போக்கு பரவலாக காணப்படுவதாக குறிப்பிட்டுள்ளார். தனி நபர் இடைவெளியை கடைப்பிடிப்பது, முகக்கவசம் அணிவது, கோவிட் பாதுகாப்பு விதிகளை கடைப்பிடிப்பதில் பொதுமக்கள் அலட்சியம் காட்டுவதை பார்க்க முடிகிறது எனவும் இவற்றை கண்டிப்புடன் கடைபிடிக்கும் வகையில் மாவட்ட நிர்வாகங்கள் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் கண்காணிப்பு பணிகளை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என்பதும் சுற்றறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது….

Related posts

விக்கிரவாண்டி தொகுதி அடங்கிய விழுப்புரம் மாவட்டத்தில் திமுக ஆட்சியில் ஏராளமான திட்டங்கள்: தமிழ்நாடு அரசு பெருமிதம்: 16,128 பேருக்கு ரூ.24.43 கோடி சுய உதவிக்குழு கடன் ரத்து

தமிழ்நாட்டில் 5 நாட்கள் மிதமான மழை பெய்யும்

சட்டம்-ஒழுங்கை பராமரிப்பதே முதல் பணி ரவுடிகளுக்கு அவர்கள் மொழியில் சொல்லிக்கொடுப்போம்: புதிதாக பொறுப்பேற்ற சென்னை போலீஸ் கமிஷனர் அருண் எச்சரிக்கை