கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை: அமைச்சர் சுதாகர் தகவல்

பெங்களூரு: கர்நாடகாவில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக சுகாதாரதுறை அமைச்சர் டாக்டர் கே.சுதாகர் தெரிவித்தார். இது குறித்து பெங்களூருவில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது, உலகத்தை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் மாநிலத்தில் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை தொடங்கினோம். அதன் காரணமாக நோய் பரவல் தடுக்கப்பட்டது. கொரோனா பாதிப்பை ஆரம்பம் (Primary), இன்னொருவருக்கு பரவுவது (Claster), சமூகம் (community) மற்றும் தொற்று (epidamic) என்று பிரித்துள்ளனர். இதில் நமது மாநிலம் இரண்டாம் நிலை உள்ளது. அதை மூன்றாவது நிலைக்கு செல்லாமல் தடுக்கும் முயற்சியை ேமற்கொண்டு வருகிறோம். மேலும் நாட்டில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் ெகாரோனா நோய் தடுப்பு பணிகள் மேற்கொள்வதற்காக நிதி ஒதுக்கீடு செய்துள்ேளாம். மேலும் தொற்று பரவல் தடுக்க கோவிட்-19 பரிசோதனைகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை 2.13 கோடி பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. தற்போது நாள்தோறும் 1.80 லட்சம் பேருக்கு பரிசோதனை நடக்கிறது. இது மூன்று லட்சமாக உயர்த்தப்படும். மேலும் ெகாரோனா தடுப்பூசி போடும் திட்டமும் துரிதப்படுத்தப்படும். கொரோனா தொற்று இரண்டாவது அலை தொடங்கியுள்ளதால், அது தொற்றாமல் இருக்க அனைவரும் தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும். 60 வயது கடந்தவர்கள் தாமாக முன்வந்து தடுப்பூசி போட்டு ெகாள்ள பதிவு செய்ய வேண்டும். பெங்களூருவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 200 ஆம்புலன்ஸ்கள் வாங்கப்பட்டுள்ளது என்றார்….

Related posts

கேரளா மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி மண்ணில் புதையுண்டு இதுவரை 357 பேர் உயிரிழப்பு

ஹமாஸ், ஹிஸ்புல்லா தலைவர்கள் அடுத்தடுத்து படுகொலை ஈரான் – இஸ்ரேல் போர் மூளும் அபாயம்: மத்திய கிழக்கு நோக்கி நகரும் அமெரிக்க போர்க்கப்பல்கள்

வயநாடு பேரழிவை சந்தித்த பின்பும் தேசிய பேரிடராக அறிவிக்காமல் இழுத்தடிப்பு: ஒன்றிய அரசின் மெத்தனத்துக்கு கேரளா கண்டனம்; நிலச்சரிவில் சிக்கிய 300 பேரின் கதி என்ன?