சென்னை: சிஎம்டிஏ நிர்வாகம் கோயம்பேடு மார்க்கெட்டில் கொரோனா பரிசோதனையை கட்டாயமாக்கியது. மேலும், கொரோனா பரவலை தடுக்க அனைவரும் முகக்கவசம் அணிந்து, சமூக விலகலை முறையாக கடைபிடிக்கப்படுகிறதா என்பதை கண்காணிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், அங்கு வருபவர்களுக்கு வெப்ப பரிசோதனை செய்யவும், சானிடைசர் கொண்டு கைகளை கழுவுதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளவும் கூடுதலாக சுழற்சி முறையில் 100 பேரை நேற்று முன்தினம் சிஎம்டிஏ நிர்வாகம் பணியில் அமர்த்தி உள்ளது….