கொரோனா தடுப்பு நடவடிக்கை ஏப்.6க்குப்பின் தீவிரப்படுத்தப்படும்

ஏப்ரல் 6ம் தேதிக்கு பிறகு கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும். கொரோனாவை கட்டுப்படுத்த வேண்டுமானால் சில நேரங்களில் கடுமையான முடிவு எடுத்தால்தான் முடியும்.  தேர்தல் பிரசாரங்கள், கூட்டங்கள் என 50 ஆயிரம் பேர் கூடும் இடங்களில், தடுப்பு நடவடிக்கைகளை செயல்படுத்துவதில் சிரமங்கள் ஏற்படுகிறது. எனவே  தடுப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்காத நிறுவனங்கள், ஓட்டல்கள், திருமண மண்டபங்கள் என எங்கெல்லாம் விதிமீறல்கள் இருக்கிறதோ, அங்கு அபராதம் விதிப்பது, நிறுவனங்களை மூடி ‘சீல்’ வைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும். ஒரு தெருவில் 3 பேருக்கு மேல் கொரோனா பாதிப்பு ஏற்பட்டால், அந்த தெரு கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்படும்.  காய்ச்சல் முகாம் பணிகளுக்காக 12 ஆயிரம் தன்னார்வலர்களை மீண்டும் பணியில் நியமிக்க உள்ளோம். தனிமைப்படுத்துதலை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுள்ளது எனவும் மாவட்ட தேர்தல் அதிகாரி பிரகாஷ் தெரிவித்தார்….

Related posts

என்ஆர் காங்.- பாஜ கூட்டணியில் விரிசல் முற்றுகிறது: பாஜ எம்எல்ஏ கல்யாணசுந்தரம் பரபரப்பு பேட்டி

கிளைச் செயலாளர்போல் செயல்படுகிறார் எடப்பாடி: கே.சி.பழனிசாமி தாக்கு

சொல்லிட்டாங்க…