கொரோனா கோரத்தாண்டவம் : 28 கோடி பேர் உலகம் முழுவதும் பாதிப்பு… 54 லட்சம் பேர் உயிரிழந்தனர்!!

ஜெனிவா:  உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 25.03 கோடியை தாண்டியது. கொரோனா வைரஸ் கடந்த 2 ஆண்டுகாலமாக உலக மக்களை தன் கைப்பிடிக்குள் வைத்துள்ளது. கோவிட் 19 தொடங்கி உருமாறிய பல வைரஸ்கள் மக்களை தாக்கி உயிரைக் குடித்து வருகின்றன. தடுப்பூசி செலுத்தியும் வைரஸ் பரவல் பல நாடுகளில் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், தென்ஆப்பிரிக்காவில் முதன் முதலில் கண்டறியப்பட்ட ஓமிக்ரான் வைரஸ் பிற நாடுகளுக்கு வேகமாக பரவி வருகிறது. இந்த புதிய வகை வைரஸ் பரவும் நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு உலகம் முழுவதும் பல்வேறு கட்டுப்பாடு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 28.03 கோடியை தாண்டியுள்ளது. இதன்படி உலகம் முழுவதும் தற்போது 28,03,32,696 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 25,03,60,687 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 54 லட்சத்து 16 ஆயிரத்து 370 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றுக்கு தற்போது 2,45,55,639 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 88,436 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-அமெரிக்கா  – பாதிப்பு – 5,32,22,424, உயிரிழப்பு –  8,37,854, குணமடைந்தோர் – 4,10,31,018இந்தியா   –    பாதிப்பு – 3,47,89,397, உயிரிழப்பு –  4,79,682, குணமடைந்தோர் – 3,42,30,354பிரேசில்   –    பாதிப்பு – 2,22,39,436. உயிரிழப்பு –  6,18,484, குணமடைந்தோர் – 2,14,14,318இங்கிலாந்து- பாதிப்பு – 1,18,91,292, உயிரிழப்பு – 1,47,857, குணமடைந்தோர் – 99,61,369ரஷ்யா            – பாதிப்பு –  1,03,92,020, உயிரிழப்பு – 3,04,218, குணமடைந்தோர் – 92,59,771தொடர்ந்து கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் விவரம்:-துருக்கி – 93,07,124பிரான்ஸ்  – 91,16,068ஜெர்மனி – 70,09,634ஈரான்  –  61,84,762ஸ்பெயின் – 57,18,007இத்தாலி – 56,47,313அர்ஜெண்டினா – 54,60,042கொலம்பியா – 51,24,690இந்தோனேசியா – 42,61,759போலந்து – 40,49,838…

Related posts

ஜோ பைடனுக்கு மூளை பாதிப்பு நோய் உள்ளதாக தகவல்? அதிபர் தேர்தலில் பைடனுக்கு பதிலாக கமலா ஹாரிசை நிறுத்துங்கள்: அமெ. மூத்த ஊடகவியலாளர் வலியுறுத்தல்

நான் மீண்டும் அமெரிக்க அதிபரானால் உக்ரைன் – ரஷ்யா போரை ஒரேநாளில் நிறுத்தி விடுவேன்: டிரம்ப் சூளுரை

இம்ரான்கானின் மனைவிக்கு முன்ஜாமீன்