கொரோனா கூட பரவா இல்லீங்கோ… பேனை பார்த்தாதான் ரொம்ப பயமா இருக்கு

சின்வாரா: மத்தியப் பிரதேச மாநிலம், சின்வாராவில் உள்ள அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளி ஒருவர், 2 நிமிடம் 17 விநாடிகள் ஓடக்கூடிய வீடியோ ஒன்றை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவில் அவர் எடுத்துள்ள காட்சிகள் இவைதான். மருத்துவனையில் வார்டில் ஏராளமான கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். வீடியோ எடுத்த நோயாளியின் படுக்கைக்கு மேலே ஒரு மின்விசிறி ஓடிக்கொண்டு இருக்கிறது. அந்த மின்விசிறி மிகவும் ஆபத்தான முறையில் இங்கும் அங்கும் ஆடியபடி எப்போது வேண்டுமானாலும் கழன்று விழும் என்ற ஆபத்தான நிலையில் சுற்றிக் கொண்டு இருக்கிறது. இந்த மின்விசிறியை காட்டியுள்ள அந்த நோயாளி, ‘‘கொரோனா என்னை கொல்வதற்கு முன்பாகவே என் தலை மீது தொங்கும் இந்த மின்விசிறி என்னை கொன்று விடும்போல் தெரிகிறது. பார்க்கவே மிகவும் பயமாக இருக்கின்றது. ஒன்று, இந்த மின்விசிறியை மாற்றுங்கள். இல்லை என்றால், எனது படுக்கையை வேறு இடத்திற்கு மாற்றி விடுங்கள். ப்ளீஸ்…’’ என மன்றாடி இருக்கிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது. …

Related posts

தேர்வில் முறைகேடு குற்றச்சாட்டுக்கு மத்தியில் நீட் கவுன்சலிங் திடீர் ஒத்திவைப்பு: ஜூலை இறுதியில் நடக்க வாய்ப்புள்ளதாக தகவல்

நாடாளுமன்றம் 22ம் தேதி கூடுகிறது ஜூலை 23ல் ஒன்றிய பட்ஜெட்: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்

மார்க்சிஸ்ட் கட்சியின் வீழ்ச்சி கவலை தருகிறது: மத்தியக்குழு பரபரப்பு அறிக்கை