கொரோனா எதிரொலி; ஜனவரி 26-ம் தேதி நடைபெற இருந்த கிராமசபை கூட்டங்கள் ரத்து.! தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு முழுவதும் ஜனவரி 26-ம் தேதி நடைபெற இருந்த கிராமசபை கூட்டங்கள் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா காரணமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கிராம சபை கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது குறித்து உள்ளாட்சி நிர்வாகிகளுக்கு தெரிவிக்க ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது. நாட்டின் 73ஆவது குடியரசு தினம் நாளை மறு நாள் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்துள்ளது. தொற்று பரவல் தினம் தினம் காட்டுத்தீ போல அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த இரவு ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகள் பல்வேறு மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டுள்ளன.தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக ஜனவரி 26-ஆம் தேதி குடியரசு தினத்தன்று நடைபெற இருந்த கிராம சபை கூட்டம் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. கிராம சபை கூட்டம் ரத்து செய்யப்பட்டியிருப்பது குறித்து உள்ளாட்சி நிர்வாகிகளுக்கு தெரிவிக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. நாட்டின் 73ஆவது குடியரசு தினம் நாளை மறு நாள் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, அன்றைய தினம் கிராம சபை கூட்டம் நடத்த தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது….

Related posts

தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்ற இளைஞர்கள், தொழில் முனைவோர் பால் உற்பத்தியில் ஈடுபட வேண்டும்: பால் வளத்துறை அழைப்பு

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து 10 ஆயிரம் போலீசாருக்கு பயிற்சி: கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்

மெட்ரோ ரயில் பணி காரணமாக பெரம்பூர் மார்க்கெட் அருகே 2 நாள் போக்குவரத்து மாற்றம்