கொரோனா இழப்பீடு பெறுவதற்கு போலி சான்றிதழ்கள்; நமது ஒழுங்கு இவ்வளவு தாழ்ந்து போகும் என நினைக்கவில்லை.! உச்சநீதிமன்றம் வருத்தம்

கொரோனா இழப்பீடு பெறுவதற்கு போலி சான்றிதழ்கள் தரப்படுவதாக வரக்கூடிய தகவல்கள் கவலையளிக்கிறது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு இழப்பீடு வழங்குவது குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த ஒரு வாரத்திற்கு முன் மத்திய அரசு கூறுகையில், கொரோனா இழப்பீடு வழங்குவத்தில் நிறைய சட்ட சிக்கல் உள்ளது.  மருத்துவர்கள் நிறையபேர் போலி சான்றிதழ்கள் வாங்குவதாக தெரிவிக்கப்பட்டது.  இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, கொரோனா இழப்பீடு பெறுவதற்கு போலி சான்றிதழ்கள் தரப்படுவதாக வரக்கூடிய தகவல்கள் கவலையளிக்கிறது. நமது ஒழுங்கு இவ்வளவு தூரம் தாழ்ந்து போகும் என நாங்கள் ஒருபோதும் நினைக்கவில்லை. கொரோனா இழப்பீடு பெற போலி ஆவணம் தருவது பற்றி விசாரிக்க உத்தரவிடவேண்டியது அவசியமாகிறது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.50,000 இழப்பீடு வழங்க வேண்டும் என்றே கூறினோம். குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும் என கூறவில்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்தது. மேலும், இந்த வழக்கை வருகின்ற திங்கள்கிழமை ஒத்திவைப்பதாகவும், அன்றைய தினம் விரிவாக விசாரணை நடத்தப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்….

Related posts

உக்ரைன் போர் விவகாரத்திற்கு மத்தியில்; பிரதமர் மோடி ரஷ்யா பயணம்: ஆஸ்திரியாவும் செல்கிறார்

இரு அவைகளையும் ஜனாதிபதி ஒத்திவைத்த நிலையில் 23ம் தேதி ஒன்றிய பட்ஜெட் தாக்கல்?: 22ம் தேதி மீண்டும் நாடாளுமன்றம் கூடுகிறது

முதல்வராக நேற்று பதவியேற்ற நிலையில் ஹேமந்த் அரசு மீது 8ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு: 47 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளதால் பிரச்னையில்லை