கொரோனா இல்லாத நாடாக மாறும் இந்தியா: கடந்த 24 மணி நேரத்தில் 2,503 பேருக்கு கொரோனா; 27 பேர் உயிரிழப்பு.!

டெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5.1 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 4.24 கோடியை தாண்டியது. இன்று காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:* புதிதாக 2,503 பேர் பாதித்துள்ளனர்.* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,29,93, 494 ஆக உயர்ந்தது.* புதிதாக 27 பேர் இறந்துள்ளனர்.* இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,15,877 ஆக உயர்ந்தது.* தொற்றில் இருந்து ஒரே நாளில் 4,377 பேர் குணமடைந்துள்ளனர்.* இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,24,41,449-ஆக உயர்ந்துள்ளது.* இந்தியாவில் குணமடைந்தோர் விகிதம் 98.72% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.20% ஆக குறைந்துள்ளது.* சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.08% ஆக குறைந்துள்ளது.* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 36,168 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.*இந்தியாவில் 1,80,19,45,779 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 4,61,318 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது….

Related posts

பாஜகவின் தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று உ.பி முதல்வர் யோகி ராஜினாமா செய்கிறாரா..? கருத்துக்கணிப்பில் பரபரப்பு தகவல்கள்

உத்தரகாண்ட்டில் மேகவெடிப்பு ; கேதார்நாத்தில் 1,500 பேர் தவிப்பு: மீட்புப் பணிகள் தீவிரம்

ஐ.நா அளவுகோலை விஞ்சி 836 இந்தியருக்கு 1 மருத்துவர்: மக்களவையில் அமைச்சர் தகவல்