கொரோனாவை மறைத்து பினராய் வாக்களித்தாரா?…புதிய சர்ச்சை

திருவனந்தபுரம்: கேரள முதல்வர் பினராய் விஜயன் ெகாரோனா பாதித்ததை மறைத்து, ேதர்தலில் ஓட்டு போட்டதாக தகவல் வெளியானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள முதல்வர் பினராய் விஜயனுக்கு கடந்த 8ம் தேதி கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.  இதையடுத்து, அன்றே அவர் கோழிக்கோடு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், நேற்று நடத்திய பரிசோதனையில் கொரோனா நெகட்டிவானது தெரிய வந்தது. இதையடுத்து, அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். ஒரு வாரம் அவர் வீட்டில் ஓய்வு எடுப்பார் என்ற ெதரிய வந்துள்ளது.இந்நிலையில், பினராய் விஜயனுக்கு தேர்தலுக்கு முன்னரே கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்ததாகவும், அதை மறைத்து  அவர் ஓட்டு போட்டதாகவும் தகவல் பரவியது. ேதர்தல் நடந்த அன்று தான் அவரது மகள் வீணாவிற்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. அவர் அன்று மாலையில் கவச உடையில் வந்து வாக்களித்தார். பினராய் விஜயனின் மனைவி கமலா, வீணாவின் கணவர் ரியாஸ், வீணாவின் மகன் இஷான் ஆகியோருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது.வழக்கமாக கொரோனா பாதித்த 10 நாட்களுக்கு பின்னர்தான் பரிசோதனை நடத்தப்படும். ஆனால், பினராய் விஜயனுக்கு நோய் இருப்பது தெரிய வந்த 7ம் நாளிலேயே பரிசோதனை நடத்தி நெகட்டிவ் என்று ெதரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அவருக்கு 6ம் தேதிக்கு முன்னரே நோய் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதனால், பினராய் விஜயன் கொரோனாவை மறைத்து வாக்களித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது….

Related posts

சிறப்பு புலனாய்வு குழுவினர் முன் ஹத்ராஸ் சம்பவத்தின் ஒருங்கிணைப்பாளர் சரண்: போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க முடிவு

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

குஜராத் மாநிலம் சூரத் அருகே சச்சின் பாலி பகுதியில் 4 மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து: 15 பேர் காயம்