கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்து தயாரிப்பில் இந்திய விஞ்ஞானிகள் சாதனை!: பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு..!!

டெல்லி: கொரோனாவுக்கு எதிரான சர்வதேச போராட்டத்தில் இந்திய விஞ்ஞானிகள் பெரும் பங்கேற்றியதாக பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்தார். அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி கவுன்சில் விஞ்ஞானிகளுடன் காணொலி வாயிலாக கலந்துரையாடிய அவர், பெருந்தொற்று காலத்தில் ஓராண்டில் தடுப்பூசி கிடைப்பதை இந்திய விஞ்ஞானிகள் உறுதி செய்ததாக குறிப்பிட்டார். வெளிநாடுகளில் தடுப்பு மருந்துக்கு எடுத்துக்கொண்ட அதேவேகத்தில் இந்திய விஞ்ஞானிகளும் செயல்பட்டு வெற்றி கண்டதாக பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார். பாதுகாப்பு தளவாடங்கள் தயாரிப்பு, தடுப்பு மருந்து உற்பத்தி என அனைத்து தடத்திலும் இந்தியா சுயசார்பு பெற விஞ்ஞானிகள் உழைத்துள்ளதாக அவர் கூறினார். 
இந்தியா தன்னிறைவு பெறுவதில் விஞ்ஞானிகள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். அனைத்து துறைகளிலும் தன்னிறைவு பெறுவதையே தேசம் விரும்புகிறது. தன்னிறைவு இந்தியா என்ற கனவை நனவாக்க நாம் உறுதி பூண்டுள்ளோம். ஒக்சிஜன் உற்பத்தியை அதிகரிப்தற்கான வழிகளை நமது விஞ்ஞானிகள் முனைப்புடன் உள்ளனர். எதிர்காலத்திற்கு வழிக்காட்டிய விஞ்ஞானிகள் அதனை நோக்கி வெளிச்சத்தை பாய்ச்சி உள்ளனர் எனவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிப்பதற்கான வழிகளை விஞ்ஞானிகள் முனைப்புடன் செய்து வருவதாக அவர் கூறினார். உலகளவில் எரிசக்தி துறையில் இந்தியா முன்னணி நாடாக திகழ்வதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார். 

Related posts

கேரள நிதியமைச்சருக்கு முஸ்லிம் மாணவி கை கொடுத்ததால் சர்ச்சை எந்த மத நம்பிக்கையும் அரசியலமைப்பு சட்டத்தை விட உயர்ந்தது அல்ல: கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு

நடிகர் ஸ்ரீநாத் பாசி, நடிகை பிரயாகா மார்ட்டினை தாதாவின் போதை பார்ட்டிக்கு அழைத்துச் சென்றவர் கைது

கேரளாவில் இருசக்கர வாகனங்களில் 4 வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு ஹெல்மெட் கட்டாயம்