கொரோனாவால் 50% மட்டுமே அனுமதி ஓட்டல்களில் விற்பனை சரிவு

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்த நிலையில் கடந்த ஆண்டு மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு அமுல்படுத்தப் பட்டது. அதில் உணவகங்கள், ஓட்டல்களில் 50 சதவீதம் வாடிக்கையாளர்களுடன், சமூக இடைவெளியுடன் தான் அனுமதிக்க வேண்டும் என்று அறிவுறுத்திருந்தனர். அதன்படி கடந்த ஆண்டு முழுவதும் ஓட்டல்களில் வாடிக்கையாளர்கள் அனுமதிக்கப்பட்டு வந்தனர். அதன்பிறகு தொற்று குறைய தொடங்கிய நிலையில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. இதனால் கடந்த ஓராண்டாக அமலில் இருக்கும் ஊரடங்கால் உணவகங்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வந்தது. இதிலிருந்து மீண்டு வர முடியாமல் தவித்து வந்தனர். இதற்கிடையில் நடப்பாண்டின் தொடக்கத்தில் இருந்து உணவகங்களில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியது. குறிப்பாக வார இறுதியில் 80 சதவீத அளவிற்கு வருகை அதிகரித்தது. இந்நிலையில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியதையடுத்து கடந்த இரண்டு நாட்களாக மீண்டும் கட்டுபாடுகளை அறிவித்துள்ளது. அதில் உணவகங்கள், டீக்கடைகளில் 50 சதவீதம் வாடிக்கையாளர்கள் தான் அனுமதிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர். இதனால் மீண்டும் அரசின் ஊரடங்கு கட்டுப்பாடுகள் ஆகியவற்றால் உணவகங்கள் சரிவை சந்துள்ளது. மேலும் இது தொடர்பாக ஓட்டல் உரிமையாளர்கள் கூறுகையில்:கடந்த ஓராண்டாக கொரோனா தொற்றால் வாடிக்கையாளர்கள் உணவகங்களுக்கு வருவதை தவிர்த்து வந்தனர். கடந்த மூன்று மாதங்களில் தான் 80-85 சதவீதம் பேர் ஓட்டல்களுக்கு வந்து சாப்பிட ஆரம்பித்தனர். இதற்கிடையில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிக்க தொடங்கியதையடுத்து 50 சதவீத வாடிக்கையாளர்கள் தான் அனுமதிக்க வேண்டும் என்று கட்டுப்பாடுகள் அமுல்படுத்தியுள்ளனர். இதனால் மீண்டும் மக்கள் ஓட்டல்களுக்கு வருவதை தவிர்த்துள்ளனர். சென்னையில் பல்வேறு வகையான 8,500 உணவகங்கள் உள்ளன. இனி அனைவரும் ஆன்லைன் ஆர்டர்களில் கவனம் முடிவு செய்துள்ளோம். அரசின் கட்டுப்பாடுகளால் சிறிய அளவிலான ஓட்டல்களுக்கு தான் பெரிய பாதிப்பாக இருக்கும் என்று ஓட்டல் உரிமையாளர்கள் கூறுகின்றனர். ஆன்லைன் விற்பனையை அதிகரிக்க முடிவு: கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் 1,106 ஒரு பகுதியில் மூன்றுக்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் இருந்தால் அந்த பகுதி கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு தடை செய்யப்பட்ட பகுதி என்று பேனர் வைக்கப்படும். அதன்படி சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் தேனாம்பேட்டை, அண்ணாநகர், கோடம்பாக்கம், ராயபுரம், திரு.வி.நகர் ஆகிய பகுதிகளில் 1,106 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் சிறப்பு குழுவினர் தீவிரமாக காண்காணித்து வருகின்றனர். தடை ெசய்யப்பட்ட பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்….

Related posts

ஒயிட்ஸ் சாலை துர்கை அம்மன் கோயிலை இடிக்கவில்லை ராஜகோபுரத்தை நவீன தொழில்நுட்ப உதவியுடன் 10 அடி நகர்த்த திட்டம்: உயர் நீதிமன்றத்தில் மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல்

மாநகர போக்குவரத்து கழக பணியாளர்கள் மற்றும் டிரைவர், கண்டக்டர்களுக்கு பயோமெட்ரிக் வருகை பதிவு : மேலாண் இயக்குநர் அதிரடி உத்தரவு

திருத்தணியில் ஆடி கிருத்திகை முன்னேற்பாடு தொடக்கம்