Sunday, October 6, 2024
Home » கொத்துக்கறி உருண்டை குழம்பு

கொத்துக்கறி உருண்டை குழம்பு

by kannappan

செய்முறை: முதலில் மிளகாய் வற்றல், வர கொத்தமல்லி, பெருஞ்சீரகம்,
கசகசா, முந்திரிபருப்பு ஆகியவற்றை இளம் சிவப்பாக வறுத்து மசாலாவாக
அரைக்கவும். குக்கரில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு கொத்துக்கறியை
தண்ணீரில்லாமல் போட்டு வதக்கவும். வதக்கிய கறியை மிக்ஸியில் லேசாக
அடித்துக் கொள்ளவும். இத்துடன் அரைத்த மசாலாவில் பாதியை சேர்த்து,
முட்டையையும் உடைத்து ஊற்றி நன்றாக கலந்து சிறு சிறு உருண்டையாக பிடித்துக்
கொள்ளவும். பின் அதே குக்கரில் 2 ஸ்பூன் நெய், 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி
பட்டை, ஏலக்காய், கிராம்பு, மல்லித்தழை, புதினா, பொடியாக நறுக்கிய
பல்லாரியை சேர்த்து நன்கு வதக்கவும். தொடர்ந்து மீதமுள்ள அரைத்த
மசாலாவையும் சேர்த்து வதக்கவும். இத்துடன் தேங்காய்ப்பாலை ஊற்றி நன்றாக
கொதிக்க விடவும். குழம்பு கொதிக்கும்போது உருண்டைகளை ஒவ்வொன்றாக போட்டு,
எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்க விடவும். இறக்கியவுடன் எலுமிச்சம்பழம்
ஜூஸை ஊற்றவும்.; மணம் நிறைந்த கொத்துக்கறி உருண்டை குழம்பு ரெடி.

You may also like

Leave a Comment

20 − 13 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi