கொத்தமங்கலம் பிடாரி அம்மன் கோயில் பாளையெடுப்பு

புதுக்கோட்டை, ஆக.8: புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் பிடாரி அம்மன் கோயில் பாளையெடுப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. கொத்தமங்கலம் பிடாரி அம்மன் கோயில் ஆடித் திருவிழாவையொட்டி கடந்த 23-ம் தேதி கோயில் சார்பிலும், மறு நாள் அவரவர் வீடுகளிலும் முளைப்பாரிக்காக பாத்திரங்களில் அதில் நவதானிய விதைகள் விதைக்கப்பட்டன. தினந்தோறும் தண்ணீர் தெளித்து பராமரித்து வந்த நிலையில், அவை நன்கு வளர்ந்திருந்தன. இத்தகைய 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முளைப்பாரியை பல்வேறு பகுதியில் இருந்து ஊர்வலமாக பெண்கள் சுமந்து சென்று, பிடாரி அம்மன் கோயிலை சுற்றி வந்து, கோயில் எதிரில் உள்ள குளத்தில் இட்டுச் சென்றனர்.
வழிநெடுகிலும் பெண்கள் கும்மியடித்தபடி சென்றனர். விவசாயம் செழிக்க ஆண்டாண்டு காலமாக இத்திருவிழாவை இப்பகுதியினர் நடத்தி வருகின்றனர்.

Related posts

திருவெறும்பூர் அருகே மஞ்சள் காமாலைக்கு பச்சிளம் குழந்தை பலி

லால்குடி அருகே சங்கிலி கருப்பு கோயிலில் கொள்ளை முயற்சி

மக்கள் குறைதீர் கூட்டத்தில் 468 மனுக்கள் பெறப்பட்டது