கொத்தமங்கலத்தில் 7.60 லட்சம் மதிப்பிலான மினி சின்டெக்ஸ் டேங்க் திறப்பு

 

நீடாமங்கலம், ஜூலை 25: நீடாமங்கலம் பேரூராட்சி கொத்தமங்கலத்தில் ரூ.7.60 லட்சம் மதிப்பிலான மினி சின்டெக்ஸ் டேங்க் திறக்கப்பட்டதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.நீடாமங்கலம் பேரூராட்சி கொத்தமங்கலம் சந்தன மாதா கோயில் தெரு மற்றும் தெற்குத் தெருவில் மக்கள் நீண்ட நாட்களாக குடிநீர் தேக்க தொட்டி வேண்டுமென்று கோரிக்கை விடுத்து வந்தனர்.இந்நிலையில் கோரிக்கையை ஏற்ற தொழில்துறை அமைச்சர் டிஆர்பி.ராஜா முயற்சியில் கொத்தமங்கலம் 15வது வார்டில் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று பேரூராட்சியின் பொது நிதி மானியம் 2022 – 23ம் நிதியில் மின் மோட்டாருடன் கூடிய ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் கொத்தமங்கலம் சந்தன மாதா கோயில் தெருவில் மினி சின்டெக்ஸ் டேங்க், கொத்தமங்கலம் தெற்கு தெருவில் 300 மீட்டர் பைப்பு லைனுடன் கான்கிரீட் கட்டிடத்துடனும் ரூ.4.60 லட்சம் மதிப்பிலான மினி சின்டெக்ஸ் டேங்க் அமைக்கப்பட்டு நேற்று முன்தினம் திறப்பு விழா நடந்தது. திறப்பு விழாவிற்கு பேரூராட்சித் தலைவர் ராமராஜ் தலைமை ஏற்று திறந்து வைத்தார். பேரூராட்சி துணைத் தலைவர் ஆனந்தமேரி ராபர்ட் பிரைஸ் முன்னிலை வகித்தார்.இதில் பேரூராட்சி செயல் அலுவலர் கங்காதரன், பணி மேற்பார்வையாளர் பழனியப்பன் மற்றும் பேரூராட்சி உறுப்பினர்கள் ஐயா பிள்ளை, திருப்பதி உள்ளிட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

 

Related posts

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருக்காட்டுப்பள்ளியில் மாபெரும் பெட்டிஷன் மேளா

அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி