கொத்தடிமை மீட்பு பயிற்சி முகாம்

ஆத்தூர்: ஆத்தூர் வருவாய் கோட்டத்திற்குட்பட்ட ஆத்தூர், பெத்தநாயக்கன்பாளையம், தலைவாசல், கெங்கவல்லிக்குட்பட்ட வருவாய்த்துறை ஊழியர்களுக்கு, தனியார் தொண்டு நிறுவனத்தின் மூலம் கொத்தடிமை மீட்பு மற்றும் முடிவுக்கு கொண்டு வருதல் குறித்த கருத்தரங்கம், கோட்டாட்சியர் சரண்யா தலைமையில் நடந்தது. கூட்டத்திற்கு, அனைத்து தாசில்தார் மற்றும் வருவாய் துறை ஊழியர்கள் கலந்து கொண்டனர். இந்த பயிற்சியின் போது, வருவாய் துறை பணியாளர்களுக்கு மனித வணிகம் மற்றும் நவீன அடிமைத்தனம் குறித்த விளக்கங்களும், கொத்தடிமைகள் முற்றிலும் ஒழிக்கும் வகையில் அடையாளம் காணுதல் மீட்பு தொழிலாளர்கள் பாதுகாப்பு குறித்த விளக்கங்கள் அளிக்கப்பட்டன.

Related posts

கிராமத்தில் புகுந்த ஒற்றை யானை விரட்டியடிப்பு

சாமியார் கொலையில் மேலும் ஒருவர் கைது வள்ளிமலை அருகே நடந்த

₹3.50 கோடி ஜிஎஸ்டி பாக்கி தகவலால் வேலை தேடும் வாலிபர் அதிர்ச்சி நடவடிக்கை கோரி வேலூர் கலெக்டரிடம் புகார் பான் எண் மூலம் கோவையில் போலி நிறுவனம்