கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி

திண்டுக்கல், பிப். 12: திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் கொத்தடிமை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தையொட்டி உறுதி மொழியேற்பு நிகழ்வு நடைபெற்றது. இதற்கு, கலெக்டரின் நேர்முக உதவியாளர் கோட்டைக்குமார், தொழிலாளர் உதவி ஆணையர் சிவசிந்து முன்னிலை வகித்தனர். டிஆர்ஓ ஷேக் முகைதீன் தலைமை வகித்து உறுதி மொழியை வாசிக்க, தொழிலாளர் துணை ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், முத்திரை ஆய்வாளர்கள் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டு உறுதிமொழி எடுத்துகொண்டனர்.

தொடர்ந்து, கொத்தடிமை தொழிலாளர் முறைக்கு எதிராக கையெழுத்து இயக்கம் தொடங்கி வைக்கப்பட்டது. மேலும், பழநி, கொடைக்கானல், நிலக்கோட்டை ஆகிய பகுதிகளில் உள்ள பல்வேறு கடைகள், நிறுவனங்கள், ஓட்டல்கள் மற்றும் பள்ளிகளில் கொத்தடிமை தொழிலாளர் முறைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. நகரில் முக்கிய இடங்களில் விழிப்புணர்வு பதாகைகள் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.

Related posts

அலங்காநல்லூர் அருகே மண் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பலி

சமயநல்லூர் அருகே சரக்கு வேன் மோதி வாலிபர் பலி

விபத்தின்றி பணியாற்றிய டிரைவருக்கு தங்க பதக்கம்