கொட்டி தீர்த்த மழை

ராசிபுரம், மே 14: ராசிபுரம், வெண்ணந்தூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில், நேற்று காலை முதல் கடுமையாக வெயில் வாட்டி வதைத்தது. இந்நிலையில் வெண்ணந்தூர், அத்தனூர், வெள்ளபிள்ளையார் கோயில், சௌதாபுரம், மின்னக்கல் உள்ளிட்ட பகுதிகளிலும், அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் நேற்று மதியம் 2 மணியளவில் திடீரென சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக பெய்த மழையால், விவசாய நிலம், வயல்களில் மழை நீர் தேங்கி நின்றது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Related posts

கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்தவர் மீது பாய்ந்தது ‘குண்டாஸ்’ வழக்கு

ரங்கம் பூ மார்க்கெட்டுக்கு வந்த மினிலாரி கவிழ்ந்து ஆட்டோ, டூவீலர் சேதம்

திருச்சியில் இருந்து கரூர் வரை செல்லும் ராணி மங்கம்மாள் சாலை 4 வழியாக மாற்றம்: விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தில் வலியுறுத்தல்