கொட்டரை அரசு பள்ளியில் தமிழ் கூடல் விழா

 

பாடாலூர், அக்.17: ஆலத்தூர் தாலுகா கொட்டரை அரசு உயர்நிலைப் பள்ளியில் தமிழ் கூடல் விழா நேற்று நடைபெற்றது. தமிழ் மன்றத்தை மேம்படுத்தும் விதமாக அரசு உயர்நிலை,மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களிடையே தமிழ் மொழியின் தொன்மை, இலக்கண இலக்கியங்கள் மீது பற்றும் ஆர்வமும் ஏற்படுத்திடும் வகையிலும்,தமிழுக்கு தொண்டாற்றிய தமிழ் அறிஞர்களை பற்றி அறிந்து கொள்ளும் வகையில் தமிழ் கூடல் விழா ஆண்டுக்கு 3 முறை நடைபெறுகிறது. பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா கொட்டரை உயர்நிலைப்பள்ளியில் பள்ளி தமிழ் மன்றத்தின் சார்பில் தமிழ்க்கூடல் விழா நேற்று நடைபெற்றது.

விழாவிற்கு பள்ளி தலைமையாசிரியர் (பொறுப்பு) செந்தில்குமார் தலைமை வகித்தார். பள்ளி மேலாண்மை குழு தலைவர் பராசக்தி முன்னிலை வகித்தார். ஆசிரியர் கார்த்திகேயன் வாழ்த்தி பேசினார். சிறப்பு விருந்தினர் முதுகலை தமிழாசிரியர் வேல்முருகன் வையத்தலைமை கொள் என்ற தலைப்பில் பேசுகையில் மாணவர்கள் தமிழ் மொழியில் மற்றும் அவரவர் தாய்மொழியில் கற்பது சிறப்பு. தலைமை ஏற்பதற்கு இந்த உலகத்தில் கல்வி என்பது மிக முக்கியமானது .அதைதமிழ் மொழியில் கற்பது மிக முக்கியம் என்றார். நிகழ்வில் பள்ளி மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக ஆசிரியர் குணச்செல்வி வரவேற்றார். முடிவில் ஆசிரியர் கோபி நன்றி கூறினார்.

Related posts

பல்கலைக்கழக நிர்வாகம் தகவல் வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில்

முன்னாள் துணை கலெக்டர் மயங்கி விழுந்து சாவு வேலூர் கலெக்டர் அலுவலகத்தில்

3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றினால் இடமாற்றம் பட்டியல் தயாரிக்க உத்தரவு பள்ளிக்கல்வித்துறையில்