கொடைக்கானல் பகுதியில் காட்டுயானைகள் அட்டகாசம்: விவசாயிகள் அச்சம்

கொடைக்கானல்: கொடைக்கானல் பேத்துப்பாறை பகுதியில் யானைகள் அட்டகாசம் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். கொடைக்கானல் மலைப்பகுதியான கீழ் மலைப்பகுதிகளில் காட்டுயானைகள் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. வனப்பகுதியில் உள்ள யானைகள்  திடீரென விவசாய நிலப்பகுதிகளுக்குள் நுழைந்து விவசாய விளைபொருட்களை துவம்சம் செய்து வருகின்றன. இதனால் விவசாயிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். காட்டுயானைகள் எப்போது வரும் என்று தெரியாததால் விவசாய நிலப்பகுதிக்கு செல்ல முடியாமலும், விவசாயம் செய்தவற்றை அறுவடை  செய்ய முடியாமலும் தவித்து வருகின்றனர். எனவே, காட்டுயானைகள் விவசாய நிலப்பகுதிகளுக்குள் வருவதை வனத்துறை கட்டுப்படுத்த வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலையில் கொடைக்கானல் பேத்துப்பாறை பகுதியில் காட்டுயானை கூட்டம் நேற்று திடீரென புகுந்தது. விவசாயப்பகுதிகளில் காட்டு யானைகள் புகுந்து உள்ளதால் இந்தப் பகுதியில் உள்ள விவசாயிகளும், பொதுமக்களும் அச்சமடைந்துள்ளனர்….

Related posts

பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலையில் தென்மாவட்ட கூலிப்படைக்கு தொடர்பு உள்ளதா? போலீஸ் விசாரணை தொடர்கிறது

காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் 13ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு

பல மாதங்களாக முடங்கி கிடந்த சோழிங்கநல்லூர்-சிறுசேரி மெட்ரோ பணிகள் மீண்டும் தொடங்கின