கொடைக்கானல் நகராட்சி பகுதியில் ரூ.80 லட்சத்தில் தார்ச்சாலை அமைக்கும் பணி தீவிரம்

கொடைக்கானல், செப். 6: கொடைக்கானல் நகராட்சி பகுதியில் புதிதாக தார்ச்சாலை அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கொடைக்கானல் நகராட்சி பகுதியில் 24 வார்டுகள் உள்ளன. இந்த வார்டு பகுதிகளில் ஏரி அருகே உள்ள சாலை, நாய்ஸ் சாலை, உள்ளிட்ட பகுதிகளில் புதிதாக தார் சாலை அமைக்க வேண்டும் என்று பழநி தொகுதி எம்எல்ஏ ஐபி செந்தில்குமாரிடம் இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்திருந்தனர். இதன் அடிப்படையில் கொடைக்கானல் நகர்மன்ற தலைவர் செல்லத்துரை, துணைத்தலைவர் மாயக்கண்ணன் ஆகியோர் சுமார் ரூ.80 லட்சம் செலவில் புதிய தார் சாலைகள் அமைப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அதன்படி தற்போது புதிய தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

புதிய தார் சாலைகள் அமைக்கும் பணியினை கொடைக்கானல் நகர் மன்ற தலைவர் செல்லத்துரை, துணைத்தலைவர் மாயக்கண்ணன், நகராட்சி உதவி பொறியாளர் செல்லத்துரை, உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர். மேலும் விரைவாகவும், தரமாகவும் பணிகளை செய்ய அறிவுறுத்தினர். அதே போல் கொடைக்கானல் ஏரி சாலை அருகே உள்ள ஜெமினி கணேசன், பங்களா சாலை அமைக்கும் பணியினை நேற்று நகர் மன்ற தலைவரும், துணைத் தலைவரும் ஆய்வு செய்தனர்.

Related posts

சிவாய நம சிவாய நம விண்ணை பிளக்க நடராஜர் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்

தமிழகத்தில் 40 ஆயிரம் காவலர்களை கூடுதலாக நியமிக்க வேண்டும்

தம்பதியின் உறவினர்கள் 2 பேர் கைது